சமையல் குறிப்புகள்புதியவை
சத்து நிறைந்த கோதுமை வெல்ல தோசை
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 2 கப்,
வெல்லம் (பொடித்தது) – அரை கப்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
ரிஃபைண்ட் ஆயில் – கால் கப்,
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை :
வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து, தோசை மாவை பதத்தில் கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் எண்ணெயை தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்) மெல்லிய தோசையாக வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, சிவந்ததும் தோசையை திருப்பிப் போடவும். இருபுறமும் சிவந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான கோதுமை வெல்ல தோசை ரெடி.