அழகு..அழகு..புதியவை

விளக்கெண்ணெய் முடிக்கு தடவலாம்… ஆனா முகத்துக்கு தடவலாமா? தடவினா என்னவாகும் நீங்களே பாருங்க…

விளக்கெண்ணெய்யை நமது முன்னோர்கள் பெருமளவில் பயன்படுத்தி வந்தனர். இதன் லேசான மஞ்சள் நிறமும் அடர்த்தியான எண்ணெய் தன்மையுடன் காணப்படும் இந்த எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

எனவே இது சருமத்திற்கு மட்டும் பயன்படுவதோடு உங்கள் கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.

ஆரோக்கியமான சருமம்

நல்ல சதைபற்றான ஆரோக்கியமான சருமம் கிடைக்க விளக்கெண்ணெய் பயன்படுகிறது. இதிலுள்ள விட்டமின் ஈ, புரோட்டீன் போன்றவை சருமம் மற்றும் கூந்தலுக்கு தேவையான போஷாக்காகும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிப்பதால் சீக்கிரம் சருமம் வயதாகுவதை தடுக்கிறது.

பருக்களை போக்குதல்

விளக்கெண்ணெய்யில் எஸன்ஷியல் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பருக்களை போக்குறது.


பயன்படுத்தும் முறை

சில சொட்டுகள் விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதை அப்படியே இரவு முழுவதும் விட்டு விடுங்கள். காலையில் எழுந்ததும் மைல்டு சோப்பு கொண்டு அலசுங்கள். சருமம் விளக்கெண்ணெய்யை உறிஞ்சி பொலிவாக ஜொலிக்க ஆரம்பித்து விடும்.

ஆரஞ்சு போன்ற உதடுகள்

விளக்கெண்ணெய் உங்கள் உதடுகளுக்கு ஈரப்பதத்தை கொடுப்பதோடு நல்ல சதைபற்றான உதடுகளை கொடுக்கிறது. இரவு நேரத்தில் கொஞ்சம் விளக்கெண்ணெய்யை கையில் எடுத்து உதடுகளில் அப்ளே செய்து மசாஜ் செய்யவும். பிறகு காலையில் எழுந்ததும் சாதாரண நீரில் கழுவவும். லிப் பாம் போடாமலே உங்கள் உதடுகள் மென்மையாக ஆடம்பரமாக அழகாக காட்சியளிக்கும்.

க்ளீன்சர்

விளக்கெண்ணெய் ஒரு இயற்கையான க்ளீன்சர் மாதிரி செயல்படுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சரும துளைகளை தூய்மை செய்கிறது. இதனால் சருமம் ஜொலி ஜொலிப்பை பெறுகிறது.

பயன்படுத்தும் முறை

ஒரு காட்டன் பஞ்சில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை தொட்டு சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். சருமம் எண்ணெய்யை நன்றாக உறிஞ்சும் வரை காத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சரும பருக்கள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறது.


அடர்த்தியான புருவங்கள்

அடர்த்தியான நேர்த்தியான புருவங்கள் தான் முகத்திற்கு அழகு சேர்க்கும். புருவ முடிகளை அடர்த்தியாக கருப்பாக வளர்ச் செய்ய விளக்கெண்ணெய் உதவுகிறது. விரல்களில் அல்லது டூத் பிரஷில் கொஞ்சம் விளக்கெண்ணெய்யை எடுத்து புருவங்களில் தேய்த்து விடலாம். இரவு முழுவதும் அப்படியே வைத்து இருந்து காலையில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் வில் போன்ற அழகான புருவ அமைப்பை பெறலாம்.

சுருக்கங்கள்

விளக்கெண்ணெய்யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் வழியாக ஊடுருவிச் சென்று சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து சுருக்கங்கள், கருவளையங்கள், வறண்ட சருமம் போன்றவற்றை சரி செய்கிறது. மேலும் சருமம் இளமையாக இருக்க காரணமான கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. பட்டு போன்ற மென்மையான சருமம் கிடைக்க உறுதுணை புரிகிறது. கொஞ்சம் விளக்கெண்ணெய்யை எடுத்து உங்கள் சருமத்தில் அப்ளே செய்து மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் கழுவினால் அழகான சருமம் பரிசாக கிடைக்கும்.

ஈரப்பதம்

வறண்ட சருமத்தை போக்கி சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. கற்பூரம் மற்றும் விளக்கெண்ணெய்யை சேர்த்ு காய்ச்சி அதை சருமத்தை புதுப்பிக்கும் லோசனாக பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தால் தோலில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை போக்குகிறது. வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் உங்கள் சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படும்.

பருக்கள் மற்றும் வடுக்கள்

விளக்கெண்ணெய் யில் ஓலியிக் அமிலம் உள்ளது. சரும துளைகளை திறந்து பருக்களை நீக்குகிறது. இரவு படுப்பதற்கு முன் கொஞ்சம் விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவி காலையில் எழுந்ததும் சாதாரண நீரில் கழுவவும். இது சருமத்தில் உள்ள கருமையை நீக்கி நல்ல நிறத்தை கொடுக்கிறது.


பிரசவ தழும்புகள்

பிரசவ காலத்தில் ஏற்பட்ட அதிகமான உடல் எடை யால் உருவான பிரசவ தழும்புகளை போக்குகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் இந்த வேலைூ செய்கிறது. கொஞ்சம் விளக்கெண்ணெய்யை எடுத்து வயிற்று மற்றும் அடிவயிற்று பகுதியில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். இதே மாதிரி இந்த முறைை கர்ப்ப காலத்தில் செய்யும் போது வயிற்றில் ஏற்படும் அரிப்பு குணமாகிறது. சருமம் மென்மையாகவும் சுத்தமாகவும் இருக்க உதவுகிறது.

பாத வெடிப்புகள்

இதன் ஈரப்பதமூட்டும் தன்மை பாத வெடிப்புகளை சரி செய்கிறது.

பயன்படுத்தும் முறை

15 நிமிடங்கள் உங்கள் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைக்கவும்.பிறகு பியூமிஸ் கல் கொண்டு பாதங்களை தேய்த்து இறந்த செல்களை நீக்கிக் கொள்ளுங்கள். பிறகு பாதங்களை நன்றாக உலர்த்தி கொள்ள வேண்டும். பிறகு பாதங்களில் விளக்கெண்ணெய் தடவி சாக்ஸ் போட்டு கவர் செய்து கொள்ளுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு பிறகு காலையில் எழுந்ததும் சாக்ஸை நீக்கி விட்டு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவவும். பிறகு என்ன பாத வெடிப்புகள் நீங்கி பட்டு போன்ற மென்மையான பாதங்களை பெறலாம்.

நீண்ட கால வடுக்கள்

இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் இருக்கும் நீண்ட நாள் வடுக்களை போக்குகிறது. இது வடுக்களின் மீது ஆரோக்கியமான செல்களை உருவாக்கி வடுக்களை சுருக்கி மறையச் செய்கிறது. உங்கள் வடுக்களின் மீது விளக்கெண்ணெய்யை சில வாரங்கள் அப்ளே செய்து வந்தால் வடுக்கள் இல்லாத அழகிய முகத்தை பெறலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker