சமையல் குறிப்புகள்புதியவை
வீட்டிலேயே செய்யலாம் சாக்லெட் குக்கீஸ்
தேவையான பொருட்கள் :
பாதாம் பவுடர் – 1/4 கப்,
சாக்லெட் சிப்ஸ் – 1 டீஸ்பூன்,
பொடித்த பிரவுன் சுகர் – 2 டீஸ்பூன்,
பால் – 1/4 கப், வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பிரவுன் சுகர், பால், வெனிலா எசென்ஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் அதில் பாதாம் பவுடர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கடைசியாக அதனுடன் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து குக்கீஸ்களாக தட்டி டிரேயில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து பரிமாறவும்.
குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லெட் குக்கீஸ் ரெடி.
குறிப்பு…
பாதாம் பவுடர் செய்ய பாதாமை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவி, ஒரு இரவு முழுவதும் காயவிட்டு மிக்சியில் பவுடராக பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.