சமையல் குறிப்புகள்புதியவை
உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப்
தேவையான பொருட்கள் :
தூதுவளை இலைகள் – 20,
சின்ன வெங்காயம் – 5,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
முழு பூண்டு – 4 பல்,
நெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்.
செய்முறை :
கொத்தமல்லி, தூதுவளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டு, வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
கடாயில் நெய் விட்டு சூடானதும் சீரகம் தாளித்து பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, கொத்தமல்லித்தழை, தூதுவளை இலையை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கி இறக்கவும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
சூடாக இருக்கும் போதே மிளகுத்தூளை தூவி பரிமாறவும்.