வீடு-தோட்டம்

நீங்கள் வீணென நினைக்கும் வெங்காயம் மற்றும் பூண்டு தோலின் பயன்கள்

அதிக ஊட்டச்சத்துக்கள்

வெங்காயம் மற்றும் பூண்டின் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சொல்லப்போனால் வெங்காயத்தை விட அதன் தோலில் அதிக சத்துக்கள் உள்ளது. எனவே இதனை சூப், கறிக்குழம்பு போன்றவை சமைக்கும்போது அவற்றின் மேல் தூவி கொதிக்க வைக்கவும். சமைத்து முடித்தவுடன் இவற்றை தூக்கி எறிந்துவிடலாம்.

வறுத்தல்

பூண்டை வறுக்கும்போது அதன் தோலை நீக்காமல் வறுக்க பழகுங்கள். ஏனெனில் இது பூண்டின் மேற்புறத்தில் உள்ள சத்துக்கள் வீணாவதை தடுப்பதோடு பூண்டை உள்ளே மென்மையாகவும் மாற்றுகிறது. அதன் பின் வேண்டுமானால் தோலை உறித்து எறிந்துவிடலாம்.


ஊட்டச்சத்துள்ள சாதம்

சாதம் வடிக்கும்போது அதில் சில வெங்காய தோல்களை சேர்த்து சமைக்கும்போது அது சாப்பாட்டிற்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. சாப்பாடு வெந்து இறங்கியவுடன் இந்த தோல்களை எளிதாக பொறுக்கி எடுத்துவிடலாம். இது சாதத்தில் உள்ள கார்போஹைட்ரேட் அளவை குறைத்து வைட்டமின்களின் அளவை அதிகரிக்கிறது.

தோசை மாவில் சேர்க்கலாம்

தோசைக்கு மாவு கலக்கும்போது அதில் வெங்காயத்தோலை சிறிது அரைத்து அதில் கலக்கவும். இது தோசையின் சுவையை அதிகரிப்பதுடன் நமக்கு அதிக ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

தசைவலிகள்

வெங்காய தோலை நீரில் போட்டு அதனை 10 முதல் 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் இதனை ஆறவைத்து தோல்களை தூக்கி எறிந்துவிட்டு சர்க்கரை சேர்த்து தூங்க செல்லுமுன் குடிக்கவும். இது உங்களுக்கு உள்ள தசைப்பிடிப்பு மற்றும் வலிகளை குணப்படுத்தும்.

தூக்கம்

உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வேண்டுமெனில் நீங்கள் குடிக்க வேண்டியது வெங்காய தோலால் தயாரிக்கப்பட்ட தேநீரைதான். நன்கு கொதிக்கவைக்கப்ட்ட நீரை வெங்காயத்தோலில் போட்டு அதனை இறுக்கமாக மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து அதனை குடிக்கவும். இது உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வழங்கக்கூடியது.


ஹேர் டை

வெங்காய தோல் சிறந்த ஹேர் டையாக செயல்படக்கூடியது. இது நரைமுடியை பழுப்பு நிறமாக மாற்ற உதவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் வெங்காய தோலை போட்டு நன்கு கொதிக்கவைக்கவும். இது ஆறிய பின் தோலுடன் சேர்த்து தலையில் தேய்க்கவும். இதை தலையில் 30 நிமிடம் நன்கு ஊறவைத்து பின்னர் குளிக்கவும்.

தொண்டைப்புண்

உங்களுக்கு கடுமையான தொண்டைப்புண் இருந்தால் அது குணமாக வெங்காயத்தோலை நீரில் போட்டு கொதிக்கவைத்து பின்னர் அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதில் உள்ள எதிர் அழற்சி பண்பு தொடையில் உள்ள புண்களை குணப்படுத்தக்கூடியது.


சரும பிரச்சினைகள்

வெங்காயத்தின் தோல் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சருமத்தில் ஏற்படும் வீக்கம், அரிப்பு, தடிப்பு போன்றவற்றை குணப்படுத்தக்கூடும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இடங்களில் வெங்காயத்தோலை வைத்து தேய்ப்பது விரைவில் நிவாரணத்தை வழங்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker