ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

உடலில் நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் பிரச்சனைகள்

உடலில் நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் பிரச்சனைகள்

உடலுக்கு நீர் சத்து மிக அவசியம். தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என ஒயாது அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் பலர் இதில் கவனக்குறைவாகவே இருந்து விடுகின்றனர் என்று தோன்றுகின்றது. அதுவும் உடற்பயிற்சி, நோய் வாய்படுதல், ஜுரம், உஷ்ணமான சிதோஷ்ண நிலை போன்றவை உடலின் நீர் சத்தினை குறைக்கச் செய்யும்.

உடலில் 70 சதவீதத்திற்கு மேல் நீர் சத்துதான் உள்ளது.இது குறையும்போது எண்ணற்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் 92 சதவீதம் நீர் உள்ளது. மூளையில் 75 சதவீதமும், தசைகளில் 75 சதவீதமும் நீர் உள்ளது. எலும்புகளில் 22 சதவீதம் நீர் உள்ளது. ஆகவேத்தான் நீரின்றி அமையாது உலகு என்பது போல் ‘நீரின்றி அமையாது உடல் என்றும் ஆகின்றது.






உடலின் முதல் சக்தி நீர்தான். உடலில் நீர் குறையும்பொழுது எண்ணம் செயல்பாடுகள் குறைந்து விடுவதால் சோர்வும், இயலாமையும் ஏற்படுகின்றது.

உடலில் நீர் சத்து குறையும் பொழுது சுவாசப் பாதை சுருங்குகிறது. நீர் சத்து குறையும்பொழுது இருக்கும் நீரினை தக்க வைக்க உடல் அதிக கொலங் டிராலினை உற்பத்தி செய்யும். இதனால் உடலில் கொழுப்பு சத்து கூடுகின்றது.

நீர்சத்து குறையும் பொழுது உடலின் கழிவுகளால் கிருமிகள் உருவாகின்றன. ஏனெனில் கழிவுகளை வெளியேற்ற உடலில் நீர்சத்து போதுமான அளவு இல்லை. இதனால் சிறுநீரகங்கள், சிறுநீரகப்பை, குழாய்களில் கிருமி தாக்குதல் ஏற்படும். குடல் அதிகம் நீரை உறிஞ்சும் உறுப்பு. நீர் சத்து குறையும் பொழுது கழிவுகள் பெருங்குடலுக்குச் செல்ல மிக நீண்ட நேரம் ஆவதால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது.

ஒவ்வொரு மூட்டிலும் உள்ள கார்டிலேஜ் அதிக நீர் சத்து கொண்டது. நீர்சத்து குறையும்பொழுது இந்த கார்டிலேஜ் பலவீனப்படுவதால் மூட்டுவலி, மூட்டு மடித்து நீட்ட இயலாமை ஏற்படும். நீர் சத்து குறைவு செல்களின் சக்தியினைக் குறைத்து விடும். இதன் காரணமாக ஒருவர் அதிகம் உண்பார். இதனால் அவர்களின் எடை கூடி விடுகின்றது.






நீர்சத்து குறைந்து இருப்பது தொடரும் பொழுது உடலின் மிகப்பெரிய உறுப்பான தோல் சுருங்கத் தொடங்கி முதுமை தோற்றத்தினை அளிக்கின்றது. சாதாரணமாக ஒரு மனிதன் 8-10 கப் நீரினை உடலிலிருந்து சுவாசம், வியர்வை, சிறுநீர், கழிவுப் பொருள் வெளியேற்றம் இவற்றின் மூலம் இழக்கின்றான்.

இனி முறையாய் நீர் குடிப்பதனை பழக்கப்படுத்திக் கொள்வோமாக.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker