ஆரோக்கியம்புதியவை

கண் சோர்வு, பார்வை குறைபாட்டை போக்கும் எளிய பயிற்சிகள்

கண் சோர்வு, பார்வை குறைபாட்டை போக்கும் எளிய பயிற்சிகள்

கண் சோர்வு மற்றும் மங்கலான பார்வை பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள்தான் அதிக அளவில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்டார்கள். இப்போது ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்களும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டார்கள். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளிக்கதிர்கள் பார்வை இழப்பை ஏற்படுத்தும்.


இன்றைய விஞ்ஞான உலகில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனினும் உணவுப்பழக்கங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் கண் நோய் பிரச் சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகம் கொண்ட கீரைகள், முட்டையின் மஞ்சள் கரு, மஞ்சள் நிற குடை மிளகாய், பூசணி, சர்க்கரைவள்ளி கிழங்கு, கேரட் போன்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். மஞ்சள் மற்றும் பச்சை நிற காய்கறிகள் பார்வை இழப்பை தடுக்கும் தன்மை கொண்டவை. மேலும் மீன், வெங்காயம், பூண்டு, கற்றாழை போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் கண்புரை பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்.

எளிய பயிற்சிகள் மூலமும் கண் சோர்வு, பார்வை குறைபாடு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். பார்வைத்திறனையும் மேம்படுத்தலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

20:20:20 என்ற வழிமுறையை பயன்படுத்தி பார்வைத்திறனை மேம்படுத்தலாம். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரம் உள்ள ஏதாவது ஒரு பொருளை 20 விநாடிகள்

கூர்ந்து பார்த்து கண்களுக்கு பயிற்சி அளித்துவர வேண்டும்.

கண்களை இறுக்கமாக மூடி திறக்கும் பயிற்சியும் கண்களுக்கு நல்லது. கருப்பு நிறம் கொண்ட சுவருக்கு முன்பாக அமர்ந்து கொண்டு கண்களை இறுக்கமாக மூட வேண்டும். அப்படி ஐந்து விநாடிகள் அமர்ந்திருந்து மெதுவாக கண்களை திறந்து பார்க்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஐந்து முறை செய்துவர வேண்டும்.


கண்களை கடிகார முட்கள் நகருவதுபோல் வட்ட வடிவத்தில் சுழலவிட வேண்டும். பின்னர் எதிர்புறமாக கண்களை சுழல செய்ய வேண்டும். அவ்வாறு ஐந்து முறை செய்து வர வேண்டும்.

உள்ளங்கைக்குள் கண்களை மூடி பயிற்சி பெறுவது கண் சோர்வு, கண் வலி பிரச்சினையை குறைக்கும். கண் பார்வை திறனையும் மெருகேற்றும். கைகளை உரசி வெதுவெதுப்பு தன்மைக்கு மாற்றிவிட்டு கண்களை மூடி அதன் மேல் சூடான கைகளை வைத்தபடி சில நிமிடங்கள் அமைதியாக இருக்க வேண்டும். பின்னர் கண்களை திறந்து மெல்ல மூடி 5 முறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker