தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகளுக்கு 8 வயது வரை கண் பரிசோதனை முக்கியம்

குழந்தைகளுக்கு 8 வயது வரை கண் பரிசோதனை முக்கியம்

நீண்ட நேரம் படிப்பது, சிறு வயதிலேயே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.


எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பாலான மாணவர்கள் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பல மாணவர்கள், தங்களுக்குப் பார்வைக்குறைபாடு இருப்பதையே அறியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் இந்த விஷயத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை.

இன்றைய சிறுவர்கள்  கண்களுக்கு அதிகப்படியாக வேலைக் கொடுக்கிறார்கள். முக்கியமாக,  நீண்ட நேரம் படிப்பது, சிறு வயதிலேயே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் இயல்பாகவே, இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போது உலகளவில் சுமார் 3 கோடியே 9 லட்சம் பார்வையற்றவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்வையிழந்து தவிக்கிறார்கள். இது உலகின் மொத்த பார்வையற்றவர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

ஒரு மனிதனுக்குத் தனது வாழ்நாளில் எந்த வயதிலும் பார்வையிழப்பு ஏற்படலாம். குறிப்பாக, சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

முக்கியமாக சிறுவர்களின் முதல் 8 வருடங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் அவர்களது மூளையும் கண்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பார்வைத்திறனை அதிகரிக்கும் காலகட்டம் அது.  இந்த தருணத்தில்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் கண்பார்வை தொடர்பான அறிகுறிகள் அப்போதுதான் தெரியவரும்.


ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் தங்களுக்கு பார்வைக் குறைபாடு இருப்பதை அறியாமலேயே அவர்கள் வளர்கிறார்கள். இதனால், ஆரம்பத்திலேயே குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் போய்விடுகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker