வயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை
காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. காபி மற்றும் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும்.
ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.
இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.
ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும்.
இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.