சமையல் குறிப்புகள்புதியவை

உளுந்து போண்டா

தேவையானப் பொருள்கள்:

  1. உளுந்து – ஒரு கப்
  2. மிளகு – ஒரு டீஸ்பூன்
  3. தேங்காய் – ஒரு துண்டு (சிறு சிறு பல்லாக நறுக்கிக்கொள்ளவும்)
  4. பெருங்காயம் – துளி
  5. உப்பு – தேவையான அளவு
  6. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு


செய்முறை:

  • உளுந்தை தண்ணீரில் நனைத்து ஊறவைக்க வேண்டும். உடைத்த கறுப்பு உளுந்து மட்டுமே நன்றாக மாவு போன்று இருக்கும். வெள்ளை உளுந்து பயன்படுத்தினால்  போண்டா அந்த அளவுக்கு மிருதுவாக  இருக்காது.
  • உளுந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது  ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய பிறகு தோல் இல்லாமல் கழுவ வேண்டும்.
  • பின்பு கொஞ்சம் நீரை விட்டு சிறிது நேரத்திற்கு மட்டும் குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.
  • பின்பு உளுந்தை  மட்டும் கிரைண்டரில் போட்டு மைய அரைக்க வேண்டும். குறைந்தது அரை மணி நேரத்திற்கு மேல் அரைக்க வேண்டும்.
  • மாவைக் கையில் எடுத்தால் பஞ்சு போல் இலேசாக இருக்க வேண்டும். பின்பு மாவை வழித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக அடித்து கொழப்ப வேண்டும். அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.
  • இதனுடன் மிளகு, தேங்காய், பெருங்காயம், உப்பு இவற்றை சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு மாவை ஒரு பெரிய கோலி அளவிற்கு உருட்டி எண்ணெயில் போட வேண்டும்.
  • ஒரு பக்கம் வெந்ததும் கரண்டியால் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுத்துவிட  வேண்டும். இதே போல் எல்லாவற்றையும் செய்து எடுத்து வைக்க வேண்டும்.
  • இது மேலே நல்ல மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

சூடான  உளுந்து போண்டா தயார். இதற்கு தொட்டுக்கொள்ளத் தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். வெண்பொங்கல் மற்றும் சாம்பார் செய்வதாக இருந்தால் கூடவே போண்டா மற்றும் தேங்காய் சட்னியும் செய்தால் நல்ல பொருத்தமாக இருக்கும்.


மருத்துவக் குணங்கள்:

  • உளுந்தில் மாவுச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புசத்து, பாஸ்பரஸ் ஆகியவைகள் அதிகம் காணப்படுகின்றன.
  • உளுந்தில் குறைந்த அளவு கொழுப்பு மட்டுமே உள்ளது.
  • மேலும் இவற்றில் வைட்டமின் “சி” அதிகம் நிறைந்துள்ளது.
  • உளுந்து எலும்பு மற்றும் நரம்பு  வளர்ச்சிக்கு மிக முக்கியத்தும் வாய்ந்தது.
  • நீரழிவு நோய் மற்றும் வாதநோயைக் கட்டுப்படுத்த வல்லது.
  • இவற்றை உண்பதால் குறைந்த அளவு கொழுப்பு மட்டுமே உடலில் சேருகிறது. இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker