ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்

பீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத 8 விஷயங்கள்!

ஒவ்வொரு மாதமும் அந்த மூன்று நாட்கள் பெண்கள் வாழ்வில் மறக்க முடியாதவை, நிறுத்த முடியாதவை. பெரும்பாலும் ஆண்களுக்கு பீரியட்ஸ் பற்றியும் பெரிதாக தெரியாது, அது எத்தகைய வலி அல்லது அசௌகரியத்தை பெண்களுக்கு உண்டாக்குகிறது என்றும் தெரியாது. சகோதரிகளுடன் பிறந்திருந்தால் சில ஆண்கள் பீரியட்ஸ் பற்றி கொஞ்சமாவது அறிந்திருப்பார்கள். இல்லையேல், திருமணம் ஆகும் வரை ஆண்களுக்கு பீரியட்ஸ் மற்றும் அதன் மூலம் மன மற்றும் உடல் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிராட்க்டிகலான சிக்கல்கள் குறித்து சுத்தமாக தெரியாது. வடிக்கட்டி எடுக்கப்படும் சில ஆண்களுக்கு திருமணம் ஆனாலும் கூட பீரியட்ஸ் பற்றி பெரிதாக அறிந்துக் கொள்ள மாட்டார்கள்.

தன் மனைவி எத்தகைய நிலையை கடந்து வருகிறாள் என்று புரிந்துக் கொள்ளாமல், சிலர் புரிந்தும் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அறிந்துக் கொள்ளாமல் சில தவறுகள் செய்வார்கள். அந்த தவறுகள் சொல்லாக அல்லது செயலாக இருக்கலாம். ஒருவேளை துணை பீரியட்ஸ் நாட்களில் இருந்தால் ஒருபோதும் இந்த தவறுகளை செய்துவிட வேண்டாம்… இல்லையேல்.. அதற்கான விளைவுகளை நீங்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் அறியாதிருப்பது… பெரும்பாலும் ஆண்கள் துணை பீரியட்ஸ் நாட்களில் இருக்கும் போது செய்யும் முதல் தவறே இது தான்…

“நீ பீரியட்ஸ்ல இருக்கியா?” என்று கேட்பார்கள். குறைந்தபட்சம் பெண் தனது

 

 துணையிடம் எதிர்பார்க்கும் விசயம் இது தான். பிறந்தநாள் மறந்தால் கூட பரவாயில்லை, எனக்கு எப்போது பீரியட்ஸ் வரும் என்பதை கூடவா அறிந்துக் கொள்ள முடியாது என்ற நிலை பெரும் கோபத்தை உண்டாக்கும். முக்கியமாக அந்த நாட்களில். திட்டமிடல்… மாதம் முழுக்க எந்த திட்டமிடலும் இன்றி… சரியாக துணைக்கு பீரியட்ஸ் ஸ்டார்ட் ஆன போது அல்லது, இடைப்பட்ட பீரியட்ஸ் நாட்களில் எங்கேனும் வெளியே போகலாம் என்று திட்டமிடுவார்கள். இது மனைவிக்கு எத்தகைய கோபத்தை உண்டாகும் என்பதை ஏனோ கணவன்மார்கள் அறிந்துக் கொள்வதே இல்லை.

 

 ஆண்கள், துணை பீரியட்ஸ் நாட்களில் இருக்கும் போது கோபப்பட்டால் மட்டும் திடீரென ரியாக்ட் செய்து திருப்பி திட்டுவார்கள், கோபித்துக் கொள்வார்கள். உண்மையில் ஆண்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய நாட்களே பெண்களின் பீரியட் நாட்களில் தான். மூட் ஸ்விங்! பீரியட் நாட்களில் பெண்களுக்கு மூட் ஸ்விங்ஸ் என்ற ஒன்று அதிகமாக ஏற்படும். ஏன், எதற்காக? அவர்கள் அப்படி கோபப்படுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அநாவசியமாக, தேவையே இல்லாமல் கூட கோபித்துக் கொள்வார்கள், திட்டுவார்கள். இதற்கு காரணம் அவர்கள் அல்ல… அந்த மூட் ஸ்விங்ஸ் தான். எனவே, இதை புரிந்துக் கொண்டு பீரியட் நாட்களில் துணை கோபப்பட்டால்… அமைதி காக்க பழகிக் கொள்ளுங்கள். நல்லாதான இருக்க?!

 

மற்ற நாட்களில் தாங்கள் எப்படி இருக்கிறோம் என்று கேட்டால்… வேண்டுமென்றே அது நொட்டை, இது நொட்டை என்று குற்றம் குறை கூறும் ஆண்கள். சரியாக மனைவி பீரியட்ஸ் தினங்களில் இருக்கும் போது நீ நல்லா தானா இருக்க, என்ன ஆச்சு என்று வம்படியாக வந்து நலம் விசாரிப்பார்கள். ஆனால், பார்க்க எவ்வளவு பிரஷாக இருந்தாலுமே கூட, பீரியட்ஸ்ன் அந்த முதல் இரண்டு நாட்கள் பெண்கள் மிகுந்த வலியுடன் தான் இருப்பார்கள். எனவே, அந்த வேளையில் போய், நல்லா தான இருக்க என்று நலம் விசாரிக்க வேண்டாம். அதற்கு பதிலாக எப்படி இருக்க, ஏதாவது பண்ணட்டுமா என்று நலம் விசாரியுங்கள். என்ன டின்னர்? இந்த தவறை முதல் இரண்டு நாட்களாவது குறைத்துக் கொள்ளலாம்… மனைவி உடல்நலம் குன்றி இருந்தாலும், நாம் அவரிடம் தான் நாளைக்கு என்ன ப்ரேக்பாஸ்ட், இன்னைக்கு டின்னர் என்ன என்று கேள்வி கேட்போம். பீரியட் நாட்களில் அவர்களிடம் ஏன் வீடு சுத்தமாக இல்லை, அடுத்த வேளை உணவு என்ன என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள்.

முடிந்தால் நீங்களே சமைத்து கொடுங்கள். இல்லையா ஹோட்டலில் வங்கி வந்து கொடுங்கள். பெரும்பாலும் பெண்கள் சமைத்து வைத்து விடுவார்கள். ஆனால்., மிகுந்த இடுப்பு வலி ஏற்படும் போது அவர்களால் படுக்கையில் இருந்து கூட எழுந்திருக்க இயலாது. எனவே, அந்த சமயத்தில் இப்படியான கேள்விகள் நிச்சயம் தவிர்கப்பட வேண்டும். புதுசு… சிலர், சில வீடுகளில் பீரியட்ஸ் நாட்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கு என்று தனி பாய், படுக்கை, போர்வை, தலையணை என்று பயன்படுத்துவார்கள். அவை அனைத்துமே பழையதாக தான் இருக்கும். இதை சில பெண்கள் இயல்பாக எடுத்துக் கொண்டாலும், சில சமயம் தங்களை ஏன் இப்படி ஒதுக்குகிறார்கள் என்ற எண்ணம் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள்.

முடிந்த வரை எப்போதும் போல அந்த நாட்களிலும் துணையை அரவணைப்புடன் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் கொஞ்சம் கூடுதல் அரவணைப்புடன். கலவுதல்! பீரியட்ஸ் ஒரு வலி என்றால், தன் வலியை கூட புரிந்துக் கொள்ளாமல், அந்த நாட்களிலும் துணை தாம்பத்தியத்தில் இணைய வேண்டும் பொழுது பெண்கள் மனதில் ஏற்படும் வலியானது மிகவும் கொடியது. பீரியட்ஸ் நாட்களில் மட்டுமல்ல, துணை விருப்பமின்றி, அவரது மனநிலை, உடல்நிலை அதற்கு உகந்த சூழலில் இல்லாத தருணங்களில் கலவியில் ஈடுபடுதல் என்பது முற்றிலும் தவறானது. இது உடலளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காட்டிலும், மனதளவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker