ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

க்ளூடன் அலர்ஜி – ஏற்படுத்தும் பாதிப்புகள்

க்ளூடன் அலர்ஜி - ஏற்படுத்தும் பாதிப்புகள்

இப்பொழுது அடிக்கடி, பேசப்படும் ஒரு வார்த்தை ‘க்ளூடன்’ அலர்ஜி என்பதாகும். ‘க்ளூடன்’ என்பது என்ன? இது ஒரு புரத குடும்பம். நம் ஊர் தானிய பிரிவில் கோதுமை, பார்லி பிரிவில் இருப்பது. இதில் கோதுமை உணவு தென்னகத்திலும் பொதுவான உணவாகி விட்டது. இந்த க்ளூடனில் உள்ள க்ளூடனின் மற்றும் கலையாடின் புரதத்தில் தான் அதிக உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்கின்றனர்.

கோதுமை மாவினை தண்ணீர் ஊற்றி பிசைந்தவுடன் இந்த க்ளூடன் புரதம் வழுவழுப்பான தன்மையினைத் தருகின்றது. இந்த கோதுமை ‘பிரெட்’ தயாரிப்பிலும் வெகுவாய் பயன்படுத்தப்படுகின்றது.பலருக்கு இந்த க்ளூடன் புரதம் எந்த தொந்தரவும் செய்வதில்லை. ஆனால் சிலருக்கு க்ளூடன் அலர்ஜி, குடல் பாதிப்பு நோய் போன்றவையை ஏற்படுத்துகின்றன.
சீலியக் நோய் என்பது கடும் நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக ஜீரண உறுப்புகள் பாதிக்கப்படுவது.

கோதுமை அலர்ஜி என்பது அதிக ஆபத்தில் கொண்டு விடலாம். மூச்சு விடுவதில் சிரமம், நினைவின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

க்ளூடன் ஒவ்வாமை

* வயிற்று வலி, * உப்பிசம், * மலச்சிக்கல், * வயிற்றுப் போக்கு, * சோர்வு, * தலைவலி, * வயிற்றுப் பிரட்டல், * தைராய்டு பிரச்சினை, * ரத்த சோகை, * படபடப்பு, * மனச்சோர்வு, * மூட்டு வலி, * தசை வலி.
போன்ற அறிகுறிகளைக் காட்டும்.க்ளூடன் இல்லாத உணவு வகைகள்:-

* அரிசி, * சோளம், * சோயா, * உருளை, * பீன்ஸ், * சிறுதானியங்கள், * ஆரரூம், * கொட்டை வகைகள், * ஓட்ஸ், * முட்டை, * காய்கறிகள், * பழங்கள், * பால்-பால் பிரிவு போன்றவை ஆகும்.

க்ளூடன் ஒவ்வாமை உடையவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.

* பிஸ்கட், * பிரட், * கேக், * சாக்லேட், * மால்ட் பானங்கள், * பிஸ்தா, * பீட்சா, * கோதுமை, * பார்லி போன்றவை ஆகும்.இப்பொழுது ‘க்ளூடன்’ இல்லாத உணவு வகைகள் பல வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எதனையும் மருத்துவ ஆலோசனை பெற்று பின்னர் பயன்படுத்துவதே சிறந்த வழியாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker