உறவுகள்புதியவை

முதல் பார்வையில் பெண்கள் ஆண்களிடம் ஈர்ப்பாக காணும் 10 விஷயங்கள்!

நாம நிறையா… பொண்ணுககிட்ட பசங்க எத நிறையா ஈர்ப்பா பார்க்குறாங்கன்னு பார்த்து, படிச்சிருப்போம். ஆனால், அதே மாதிரி பொண்ணுங்களும் பசங்கக்கிட்ட சில விஷயத்த ஈர்ப்பா பார்ப்பாங்கன்னு அவ்வளோ பெரிசா யோசிச்சிருக்க மாட்டோம்.

ஆமா… பசங்கள விட நாசூக்கா சைட்டடிக்க தெரிஞ்ச பொண்ணுகளுக்கு… அதே மாதிரி மாஸா ரசிக்கவும் தெரியுமாம்…

ஷர்ட் கலர்ல இருந்து, கண்ணு, தோள், தோரணை, லிப் மூவ்மெண்ட் வரைக்கும் பசங்க பல விஷயங்கள கவனம் செலுத்தனும். நாங்க ரசிக்கிற விஷயத்துல ஸ்ட்ராங்கா இருந்தாதான எங்கள ஈர்க்க முடியும்னு வேற டிப்ஸ் தராங்க…

முடி

முடி

ஆண்கள் சில சமயம் தங்கள் சிகை அலங்காரத்தின் மீது நாட்டம் கொண்டிருக்க மாட்டார்கள். வெறுமென கைவிரல்களை பயன்படுத்து கசகசவென அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு வீட்டில் இருந்து கிளம்பிவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. தங்கள் சிகை அலங்காரமாக இருந்தாலும் சரி, தான் விரும்பும் ஆணின் சிகை அலங்காரமாக இருந்தாலும் சரி அதை மிக உன்னிப்பாக கவனிப்பார்கள். ஏனெனில், பெண்கள் பார்த்தவுடன் ஆண்களிடம் ஈர்ப்பாக காணும் விஷயம் முடி. உங்கள் சிகை அலங்காரம் சிறப்பாக இருந்தால்… பெண்கள் மத்தியில் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்பை பெறலாம்.

எனர்ஜி



எனர்ஜி

எனர்ஜி என்றவுடன் வேற எண்ணங்களுக்கு ஓடி விட வேண்டாம்.. எனர்ஜி என்பது உங்களுக்குள் இருக்கும் விஷயத்தை மற்றவர்கள் உணர்வு ரீதியாக அறிவது. சிலரை கண்டவுடன் நாம் சுறுசுறுப்பாக இயங்குவோம், சிலரை கண்டதும் சோம்பேறியாகிவிடுவோம். அப்படி, ஓர் ஆணை பார்த்தவுடன் தங்களுக்குள் ஒரு எனர்ஜி ஏற்பட வேண்டும். அந்த எனர்ஜி தான் பெரும் ஈர்ப்பு என்கிறார்கள் பெண்கள்.

டீ-ஷர்ட் / ஷர்ட் நிறம்

டீ-ஷர்ட் / ஷர்ட் நிறம்

நீங்கள் எப்படியான டீ-ஷர்ட், ஷர்ட் வேண்டுமானாலும் அணிந்திருக்கலாம். இங்கே என்ன உடை என்பதல்ல மேட்டர், என்ன கலர். பெண்களுக்கு நிறங்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும். நமக்கு தெரிந்தது எல்லாம் 12 நிறங்கள் தான். ஆனால், பெண்களுக்கு அந்த ஒவ்வொரு நிறத்திலும் 12 ஷேடு தெரியும்.

தங்களுக்கு என்றால் லைட் நிறங்களை தேர்வு செய்யும் பெண்கள். தங்கள் துணைக்கு என்றால் டார்க் நிறத்தை தான் தேர்வு செய்வார்கள். டார்க் நிறம் கூடுதல் ஆண்மையை வெளிப்படுத்தும். எனவே, உங்களுக்கு பிடித்த பெண்ணை ஈர்க்க வேண்டுமானால்… நீங்கள் உடுத்தும் உடையின் நிறத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

பேண்ட்



பேண்ட்

சட்டை சரி.. பேண்ட்ல? என்ன இருக்குன்னு யோசிக்கிறீங்களா… ஆம்! பேண்ட் ஃபிட்டிங்கிலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறதாம்… ஒரு ஆணின் பேண்ட் ஃபிட்டிங்கை வைத்து அவரது குணாதிசயம் பற்றி அறிந்துவிடுவார்கலாம் பெண்கள். உடலோடு ஓட்டி உடுத்தினால் ஒருவகை, டெனிம் ஜீன்ஸ் ஃபிட் அணிந்திருந்தால் ஒரு வகை என ஃபிட்டிங்கிலும் வகை பிரித்தி வைத்திருக்கிறார்கள் பெண்கள். இது கொஞ்சம் லூசுத்தனமாக தான் இருக்கும்… ஆனால், நம்பி தான் ஆகவேண்டும்.

கை அசைவுகள்

கை அசைவுகள்

பேசும் போது, உட்காரும் போது, நடக்கும் போது என ஒரு ஆணின் கை அசைவுகளை வைத்தும் ஒரு ஆணை எடை போடுகிறார்கள் பெண்கள். இதுப்போக, ஃபுல் ஷேவிங், ட்ரிம், நாலு நாள் தாடி என ஆண்களை ஸ்கேட்சு போட்டு அளக்கிறார்கள் பெண்கள். இப்படி பார்த்தா பசங்க எவ்வளவோ பரவாயில்ல போலயே…

தோரணை

தோரணை

ஒரு பெண்ணை சீக்கிரமாக ஈர்க்க முக்கியமான விஷயம் இந்த தோரணை. ஆண்கள் பாஷையில் கூற வேண்டுமானால் கெத்து லுக்கு. இந்த தோரணையை வைத்து எளிதாக ஆண் மீது ஈர்ப்பு கொண்டு விடுகிறார்கள். ஆனால், தோரணை கெத்தாக இருக்க வேண்டும். நிற்கும் போது நடக்கும் போது, உட்காரும் போது, பேசும் போதென… மாஸ் மேனரிசம் எதிர்பாக்குறாங்க போலயே.

தோள்



தோள்

ஆம்! பெண்களுக்கு ஆண்களின் தோள்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தோள்களில் சாய்ந்து கொள்வது, இறுக்கமாக அனைத்துக் கொள்வது என பெண்கள் நிறைய பிரியம் காட்டும் இடம் ஆண்களின் தோள்கள் தான். அகலமான தோள்கள் கொண்ட ஆண்கள் மீது பெண்களுக்கு ஈர்ப்பு அதிகம். மேலும், அகலமான தோள்கள் கொண்டிருக்கும் ஆண்கள் உடல் மற்றும் மனதளவில் வலிமையாக இருப்பார்கள் என்று பெண்கள் கருதுகிறார்கள்.

கண்கள்

கண்கள்

பெண்களுக்கு பெரிய கண்கள் அழகு என்றால், ஆண்களுக்கு ஷார்ப்பான கண்கள் அழகு என்று கூறுகிறார்கள் பெண்கள். ஆண்களின் கண்கள் மூலமாகவும் அவர் எப்படிப்பட்டவர் என்று அறிந்துக் கொள்கிறார்கள். தங்களை பார்த்தும் பேசும் போது, அவர்கள் கண்கள் எப்படி அசைகின்றன… எங்கே லுக்கு விடுகின்றன என்பதை எல்லாம் வைத்து ஒரு ஆண் எப்படி பட்டவர் என்று எடை போட்டு விடுவார்களாம் பெண்கள்.

ரியாக்ஷன்

ரியாக்ஷன்

பேசும் போது, ஒரு கேள்வி கேட்கும் போது, ஒரு சூழலை கையாளும் போது ஆண்களின் ரியாக்ஷன் பெண்களை ஈர்க்கும் முக்கியமான விஷயமாக அமைகிறது. கடினமான சூழலை எளிமையாக கையாளும் ஆண்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள். இயல்பான சூழலை கூட கையாள முடியாமல் தடுமாறினால் அவர்கள் மீது ஈர்ப்பு புஷ்வானம் ஆகிவிடுகிறது.

 லிப் மூவ்மெண்ட்



லிப் மூவ்மெண்ட்

சிரிப்பதாக இருக்கட்டும், பேசும் போதிலாகட்டும் ஆண்கள் இதழ் அசைவுகளை நன்கு கவனிப்பார்களாம் பெண்கள். கீச்சு, கீச்சு என்று சிரிக்காமல் வாய்நிறைய சிரிக்கும் ஆண்கள் ஈர்ப்பானவர்கள் என்று கருதுகிறார்கள். இதழ்கள் பேசுவதற்கு மட்டுமல்ல… அதன் அசைவுகள் மூலமும் ஒருவரின் ஆர்வம் என்னவென்று அறிந்துக் கொள்ள முடியும் என்கிறார்கள்.

 

 

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker