நீர்ச்சத்து மிகுந்த பழ வகைகள்
இப்போது பருவமாற்றம் நிகழும் காலம். குளிரில் இருந்து வெயிலுக்கு மாறும் இந்த நேரத்தில் நமது உடலிலும் மாற்றங்களை உணரலாம். உடலை சுத்தப்படுத்தி கொள்வது நல்லது. அதற்காக பேதி மருந்து எடுக்கலாம். அல்லது காலை விளக்கெண்ணெய் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது புதிய காலநிலைக்கு நம் உடலை தயாராக வைக்கும்.
அக்னி குளிர்காலத்தில் அதிகம் தேவையாக இருக்கும். அப்போது செரிமானம் அதிகம் நடக்கும். வெயிலுக்கு மாறும்போது செரிமானம் குறையும். அக்னி குறைவாக இருப்பதால் அதற்கு நமது உடலை தயார் செய்து கொள்ள வேண்டும்.
இயற்கையே, நமக்கு தேவையான உணவுகளை தருகிறது. பழவகைகள், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் அபரிமிதமாக இந்த பருவத்தில் கிடைக்கின்றன. அவற்றை உண்பது நல்லது.
இப்போது அறிவியல் முன்னேற்றத்தால் எல்லா காலங்களிலும் கிடைக்கும் வகையில் காய்கறிகள், பழங்களின ஜீன் மாற்றப்படுகிறது. இது உடல் நலனுக்கு நல்லதல்ல. விதையே வராதபழங்கள் இயற்கைக்கு எதிரானவையே.
அந்தந்த பிரதேசங்களில் விளையும் பொருட்கள், மருந்துகள் அவரவர்க்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது நியதி. உலகம் முழுவதும் கிடைக்கும் பழங்கள், நம் ஊரிலேயே கிடைத்தாலும், நமது உடலமைப்புக்கு பழகிபோன பொருட்களை உண்பதே நல்லது.
அதைபோலவே அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பொருட்களை உண்பதே நலம் பயக்கும்.