நம் கண்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம்.
நம் கண்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம். வீட்டிலிருந்தே கண்களைப் பாதுகாக்கும் எளிமையான இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.
1. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, வெள்ளரிக்காய்தான் கண்களுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட். கண்களை மூடிக்கொண்டு, நறுக்கிய வெள்ளரிக்காயை வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கருவளையம் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும்.
2. வெள்ளரிக்காய் – 1/2, உருளைக்கிழங்கு – 1/2, மஞ்சள் தூள் – சிறிதளவு, எலுமிச்சை – 1. வெள்ளரிக்காயையும் உருளைக்கிழங்கையும் துருவிக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், எலுமிச்சை சாற்றை கலந்துகொள்ளவும். பின்னர், கண்களின் மேல் ஒரு காட்டன் துணியை வைத்துக்கொண்டு அதன்மேல் இந்தக் கலவையை பூசிக்கொள்ளவும். 15 நிமிடங்கள் வைத்திருந்து கண்களைக் கழுவவும். (இவை, நேரடியாகக் கண்களின் மேல் படக்கூடாது). இவ்வாறு பயன்படுத்துவதால், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. ஸ்டிராபெர்ரி பழத்தை மெல்லியதாக ஸ்லைஸ் செய்து, கண்களின் மேல் நேரடியாக வைத்துக்கொள்ளவும். இது, கருமையை நீக்கி, புத்துணர்ச்சியை அளிக்கும்.
4. காட்டன் பந்துகளை எடுத்து, அவற்றைக் குளிர்ந்த பாலில் நனைத்து, கண்களைச் சுத்தப்படுத்த வேண்டும். இதன்மூலம் கண்களில் உள்ள அழுக்கை நீக்கலாம்.
5. ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து கண்களை துடைத்து வந்தால், கண்களுக்குப் பொலிவு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
6. ஒரு டீஸ்பூன் சோம்பை ஒரு கப் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவி வந்தால், கண்களின் சோர்வு நீங்கும்.