ஆண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்
நீங்கள் ஜிம்மிற்கு செல்லும்போது சரியான ஃபிட்னஸ் திட்டம், (men good healthy exercise tips) தவறாமல் உடற்பயிற்சிகள் செய்வது, நல்ல உடலமைப்பு, ஆகியவற்றில் தான் அதிகம் கவனம் செலுத்துவீர்கள் இல்லையா?
உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரத்தைப் பற்றி யோசிப்பீர்களா? ம்ம்ம்! ஜிம்மிலிருந்து வந்தபிறகு குளித்துவிட்டு, சுத்தமான ஆடைகளை அணிவீர்கள். . . அது நல்ல விஷயம், (men good healthy exercise tips) ஆனால். . . அது மட்டும் போதுமா? நேற்று ஜிம்மில் உங்களுக்குப் பக்கத்தில் த்ரெட்மில்லில் பயிற்சி செய்த துர்நாற்றம் வீசும் இளைஞரை நினைவிருக்கிறதா? மற்றவர்களுக்கு உங்களால் இதே உபத்திரவம் ஏற்படாமல் இருக்கும் என்பது நிச்சயமாக உங்களுக்குத் தெரியுமா?
உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கான சில குறிப்புகள் (Some tips for maintaining basic gym hygiene):
- ஜிம்முக்குச் செல்லும்முன்பு உங்களை ஒழுங்காக சுத்தம் செய்துகொள்ளுங்கள், குறிப்பாக அலவலக வேலை நேரத்திற்குப் பிறகு ஜிம்முக்குச் செல்வதாக இருந்தால் இது முக்கியம். ஜிம்முக்குச் செல்லும் முன்பு குளித்துவிட்டு, பெர்ஃப்யூம் போட்டுக்கொள்ளுங்கள், அதே சமயம் அதிகமாக போடக்கூடாது.
- எப்போதும் தளர்வான மற்றும் வசதியாக இருக்கும் உடைகளை அணியுங்கள். காட்டன் உடை அல்லது வியர்வையை ஆவியாக்கும் உடைகளை அணிந்துகொள்வது நல்லது.
- உங்கள் அக்குள் பகுதிகளை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
- உராய்வு ஏற்படும் பகுதிகளில் (உதாரணம். தொடை இடுக்குப் பகுதிகள், அக்குள்) பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துதல் போன்ற சிறப்பு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- எந்தவொரு உபகரணத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கைகளை சோப்பு போட்டு நீரால் கழுவ வேண்டும். எப்போதும் ஹேன்ட் சானிட்டைசரை உடன் வைத்திருப்பது நல்லது.
- உடற்பயிற்சி செய்யும்போது வியர்க்க வேண்டும், அது அவசியம். அதற்காக, வியர்வையால் நனைந்த உபகரணங்களைப் பயன்படுத்த யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே வியர்வையைத் துடைப்பதற்காக ஒரு சுத்தமான டவலை எடுத்துச் சென்று, உடற்பயிற்சி செய்து முடித்ததும் உபகரணங்களை துடைப்பது முக்கியமாகும்.
- உங்கள் உடலில் உள்ள நீரின் அளவைப் பராமரிக்க, தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் சிறிதளவு நீர் அருந்துவது மிகவும் முக்கியமாகும். பிளாஸ்டிக் பாட்டிலுக்குப் பதிலாக மெட்டல் பாட்டில்களைப் பயன்படுத்துவது நல்லது. பிளாஸ்டிக் பாட்டில்களை கிருமி நீக்குவது கடினம் என்பதால், அதில் கிருமிகள் அதிகம் சேரும். மெட்டல் பாட்டில்களை சோப்பு மற்றும் கொதிக்கும் நீரைக்கொண்டு கிருமி நீக்கிவிடலாம். மேலும், நீங்கள் பார்க்காதபோது, யாரவது உங்கள் பாட்டிலில் இருந்து நீர் அருந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு, வியர்வை நிறைந்த உடைகளை நேரடியாக ஜிம் பையில் போடுவதற்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றிப் பிறகு போடுங்கள். முழுமையாக உலராத ஆடைகளை வாஷிங் மெஷினில் நீண்ட நேரம் போடுதல், கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலையாக இருக்கலாம். ஆடைகள் முதலில் உலர வேண்டும், உலர்ந்த பின்பே துவைக்கப்பட வேண்டும், தனியாகத் துவைப்பது நல்லது. துணிகளைத் துவைத்தப் பிறகு துணிகளின் வாசனை புதியதாக இல்லையெனில், மீண்டும் துவைக்க வேண்டும். மீண்டும் துவைக்கமால் அந்த துணிகளை அணிவது நல்லதல்ல.
- மேலும், உங்கள் ஜிம் ஷூவை மறந்துவிடாதீர்கள் – ஜிம் பையில் அவற்றைப் போடுவதற்கு முன்பு பிளாஸ்டிக் பையில் சுற்றிக்கொள்ளுங்கள். வீட்டிற்கு வந்த பிறகு, கிருமி நீக்கும் வைப்ஸைக் கொண்டு கிருமி நீக்கி, காற்றில் உலர வைத்தால், அடுத்த நாளிற்கு அவை தயாராகிவிடும்! உங்கள் ஷூவில் உண்டாகும் நாற்றத்தைத் தவிர்க்க, இரவு முழுவதும் ஷூவின் உட்பகுதியில் தேயிலைப் பைகளை வைக்கலாம்.
- ஹெல்த் கிளப்பில் குளிப்பதாக இருந்தால், ஃபிளிப் ஃபிளாப்பைப் பயன்படுத்தவும், அவை உங்களுக்கும் தரைக்கும் இடையே தடுப்பாகச் செயல்படும், ஆனாலும் பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் தான்.
- உடற்பயிற்சி முடித்துவிட்டு வரும்போது, சோஃபாவைப் பார்த்ததும் உட்கார்ந்து ஓய்வெடுக்க மனம் ஏங்கும்! ஆனால் அதைக் கட்டுப்படுத்துங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குளிக்கச் சென்றுவிடுங்கள், ஆனால் அதற்கு முன்பு உங்கள் உடல் குளிர்ச்சியடைய வேண்டும், அது வரை காத்திருந்து அதன் பிறகே குளிக்க வேண்டும்.
- தலைமுடி பராமரிப்பு: தினமும் ஜிம் முடித்துவிட்டு வந்த பிறகு தலைக்கு ஷாம்பூ போட்டு குளிப்பது மிகவும் கெடுதலானது. அடிக்கடி ஷாம்பூ பயன்படுத்துதல் உங்கள் முடியை வறட்சியாகவும் உறைந்ததாகவும் மாற்றும் ஆகவே, கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது.
- உங்களுக்கு இருமல், தும்மல் அல்லது மூக்கு ஒழுகுதல் எதாவது இருந்தால் ஜிம்மிற்குச் செல்ல வேண்டாம். ஜிம்மிற்கு செல்லாமல் இருப்பது உங்கள் உடல் குணமடைய உதவும், மேலும் மற்றவர்கள் உங்களால் பாதிப்படைவதையும் தடுக்கும் ஏதேனும் திறந்த காயங்கள் இருந்தாலும் மேற்கூறியது பொருந்தும்.