புதியவைமருத்துவம்

நீரிழிவு எப்படி கருத்தரிப்பின்மைக்குக் காரணமாகிறது?

நீரிழிவு நோயின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வருவது, நீரிழிவுடன் கூடிய கருத்தரிப்பின்மையையும் அதிகரிக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

‘கருத்தரிப்பின்மை என்பது ஒரு வருடம் முழுவதும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்ட போதும், கருத்தரிக்க இயலாமல் போவதைக் குறிக்கிறது. இந்த கருத்தரிப்பின்மை, கணவர் மனைவி இருவரையும் பாதிக்கலாம். அதனால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து, பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சரியான தீர்வைப் பெற்று பலனடைவது மிகவும் அவசியம்.

கருத்தரிப்பின்மைக்கான சரியான காரணம் கண்டுபிடிக்கப்பட்டால், அப்பிரச்னைக்குரிய சரியான சிகிச்சை மேற்கொள்ள முடியும். ‘டைப் 1’ மற்றும் ‘டைப் 2’ நீரிழிவு நோய், தற்போது உலகளவில் அதிகரித்து வரும் வேளையில், நவீன வாழ்க்கை முறையால் ஆரோக்கியமில்லாத உணவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் உண்டாகும் ‘டைப் 2’ நீரிழிவு நோய் ஒரு நவீன நோயாக கூறப்படுகிறது. இந்த நீரிழிவு கருத்தரிப்பின்மைக்கும் காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘டைப் 1’ நீரிழிவு நோய் பொதுவாக இளம் வயதுடையவர்களுக்கு உண்டாவது. தற்போதுள்ள நிலவரப்படி, நீரிழிவு நோயானது இன்னும் சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. சில ஆய்வுகளில் டைப் 1 நீரிழிவு நோயானது, இளைஞர்களை பெருமளவில் பாதிக்கிறது என்றும், இன்னும் 10 ஆண்டுகளில் இதன் பாதிப்பு 50% ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோயின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வருவது, நீரிழிவுடன் கூடிய கருத்தரிப்பின்மையையும் அதிகரிக்கும். மேலும் நீரிழிவு நோயானது ஆண்கள் மற்றும் பெண்களிடம் இனப்பெருக்கத்துக்கான ஆரோக்கியத்தையும் அதிகம் பாதிக்கும்.

நீரிழிவு நோயின் பாதிப்புள்ள ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் குறைவாகவும் இருக்கலாம். காரணம், அவர்களது விந்துவின் அடர்த்தி குறைவாகவும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கக்கூடும்.

மேலும் இவர்களுக்கு நீரிழிவு நோயின் காரணமாக விறைப்பு குறைபாடும், பாலுணர்வு குறைவாகவும் இருக்கும். ஆணின் விந்தணுக்கள், பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளை அடையாமல், சிறுநீரகத்துக்குள் சென்றுவிடுகின்றன. மேலும், நீரிழிவை கட்டுப்படுத்த எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் ஆணின் விறைப்பு செயலிழப்புக்குகாரணமாகிறது’ என்று குறிப்பிடுகிறது.’’

‘‘பெண்களைப் பொறுத்தவரை நீரிழிவு நோயானது ஹார்மோன்களின் சரிவிகித குறைபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த ஹார்மோன் சரிவிகித குறைபாடு பிசிஓஎஸ்(PCOS) என்று அழைக்கப்படுகிறது.

அதிக எடையுள்ள பெண்களுக்கு பிசிஓஎஸ் மற்றும் நீரிழிவு வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இது பல்வேறு புதிய பிரச்சனைகளை உருவாக்கும். அதிக உடல் எடை அல்லது பருமன் அதிகமுள்ள பெண்கள் இயற்கையாக கருத்தரிக்க மிகவும் கடினமாக இருப்பதாக உணர்கிறார்கள்.

கருத்தரிப்புக்கான சிகிச்சை முறைகளின் வெற்றி வாய்ப்புகளையும் நீரிழிவு மற்றும் உடல்பருமன் பாதிக்கிறது. சாதாரண குளுக்கோஸ் அளவைவிட அதிகமாக இருக்கும் ஒரு பெண் கருத்தரிக்கும் மாதம் தள்ளிப்போகிறது.

துரதிர்ஷ்டவசமாக கருவானது கருப்பைக்குள் செல்வதை நீரிழிவு நிலை தடுக்கிறது. அவள் கர்ப்பமாக இருப்பதை உணரும் முன்னே ஒரு கருச்சிதைவு ஏற்பட்டுவிடுகிறது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker