அழகு..அழகு..புதியவை
பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..!
வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே உங்கள் சருமத்திற்கு அழகு சேர்க்கலாம்.. இதோ அதட்கான சில டிப்ஸ்!
-
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
-
சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
-
தலை முடி செழித்து வளர வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும், இவ்வாறு செய்துவந்தால் பலன் தரும்.
-
சருமம் நிறம் அதிகரிக்க ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன், பால்பவுடர் அரை டீஸ்பூன், பார்லி பவுடர் அரை டீஸ்பூன் மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் மின்னல் போல மின்னும்.
-
கண்கள் பிரகாசமாக இருக்க இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவுதல் வேண்டும். கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்.