ஷட்கர்மா மற்றும் பிராணாயாமத்திற்கு பயனுள்ள முத்திரைகள்
பிராணாயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சிகளை செய்வதற்கு பயனுள்ள எளிய தியான ஆசனம் மற்றும் தியான ஆசனங்களுக்குரிய முத்திரைகளும் உள்ளன.
ஆசனப் பயிற்சிகளை முடித்த பிறகு தியான ஆசனத்தில் அமர்ந்து இரண்டொரு நிமிடங்கள் ஓய்வு பெறவும். பிராணாயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சிகளை செய்வதற்கு பயனுள்ள எளிய தியான ஆசனம் மற்றும் தியான ஆசனங்களுக்குரிய முத்திரைகளும் உள்ளன. இந்த தியான ஆசனங்களில் அமர்ந்து பிராணயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சியான கபால பாத்தியும் அதன்பிறகு பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்யவும்.
பெயர் விளக்கம்: ‘சின்’ என்றால் ஞானம். முத்திரை என்றால் அடையாளம். இம்முத்திரை ஞானத்தை உணர்த்தும் அடையாளமாக இருப்பதால் சின்முத்திரை என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் உட்காரவும், கைகளை நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப்பகுதியை அந்தந்த கால்முட்டிகளின் மேல் வைக்கவும். கட்டை விரல்களின் நுனியில் ஆள்காட்டி விரலின் நுனிபடும் படியாகவோ அல்லது கட்டை விரலின் அடியில் நீட்டி வைக்கவும்.
தியானப் பயிற்சியின் போது கை விரல்களால் செய்யும் முத்திரைகளில் மிகச் சிறந்தது சின்முத்திரையாகும். தியான ஆசனத்தில் உள்ளங்கைகள் மேல்நோக்கியபடி வைத்து செய்யவும்.
பயன்கள்: கை மணிக்கட்டுகளின் இருப்பக்க ஓரத்திலும் இருதயத்தின் வேகமான துடிப்பை குறைக்கவும் நரம்புகள் செல்கிறது. இப்பயிற்சியில் கை மணிக்கட்டுகளின் ஓரப்பகுதி நன்கு அழுத்தப்படுவதால் இருதயம் மற்றும் நுரையீரலின் வேகமான இயக்கம் குறைக்கப்படுவதன் மூலம் மூச்சின் வேகமும் குறைந்து மனம் அமைதி அடைந்து தியானத்தில் முழுமையாக ஈடுபட உதவுகிறது.