சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு
முளைக்கட்டிய பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முளைக்கட்டிய பச்சைப்பயறுடன் சத்து மாவு சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சத்து மாவு – ஒரு கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
உப்பு – சிட்டிகை,
முளைக்கட்டிய பச்சைப்பயறு – கால் கப்,
நேந்திரன் பழத்துண்டுகள் – ஒரு கப்.
செய்முறை :
வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசறவும்.
அதனுடன் முளைக்கட்டிய பச்சைப்பயறை சேர்த்து கலக்கவும்.
இதனை இட்லி தட்டில் பரத்தி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
அதனுடன் தேங்காய்த் துருவல், நேந்திரன் பழத்துண்டுகள் சேர்த்து கலக்கவும்.
கடலைக் கறியுடன் பரிமாறலாம்.
சூப்பரான சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு ரெடி.
– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.