தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

பெண் குழந்தைகளை மதிக்க ஆண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியவை

ஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இல்லையேல் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்து விடும்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் எல்லாம் குற்றம் சுமத்தப்படுபவர்கள் ஆண்கள் என்றால், இன்னொரு பக்கம் ஆண் என்றாலே வில்லன் மாதிரியான மனோபாவம் இருக்கிறது. இதனை தடுக்க சிறுவயதில் இருந்தே ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான சூழலை நாம் தான் ஏற்படுத்த வேண்டும் என்று மனநல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆண், பெண் சமத்துவத்திற்கு ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை:-

குழந்தைப் பருவத்தில் அவர்கள் கவனம் விளையாட்டில் தான் இருக்கும். ஆண், பெண் குழந்தைகளை ஒன்றாக விளையாட விடுங்கள். ஆண்குழந்தைகளுக்கும் பார்பி பொம்மை பிடிக்கும் பட்சத்தில்,அதை வைத்து விளையாடுவதில் தவறேதும் இல்லை.

ஆண் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை தான் அழ முடிகிறது. அதற்கு பிறகு அவன் மீது ஆண் என்ற முள் கிரீடத்தைதூக்கி வைத்துவிடுகிறீர்கள் அவனும் அழ மறந்து விடுகிறான். நீ ஆண், அழக்கூடாது என்று எச்சரிக்கைசெய்வதோ, ஆம்பளப்புள்ள எங்கயாவது அழுவாங்களா என்று கேட்டு கிண்டலடிப்பதோ செய்யாமல் அழஅனுமதியுங்கள்.

மனதில் ஏற்படும் சங்கடங்களை அழுகையின் மூலம் வெளிப்படுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். தன் அறையை சுத்தம் செய்வது, தான் சாப்பிட்ட தட்டுகளை கழுவுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை ஆண்குழந்தைகளை செய்ய அனுமதியுங்கள். அதை பழக்கப்படுத்துங்கள். தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் உதவி செய்வதை உற்சாகப்படுத்துங்கள்.</p>

அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, சமையல் வேலையாக இருந்தாலும் சரி இன்னொருவரின் கஷ்டத்தில் பங்கெடுப்பதால் அந்த சூழலை சமாளிக்க அவர்களுக்கு பழக்கமாகும். மிக முக்கியமாக பள்ளியில் பெண் தோழிகள் இருந்தால், அதை ஊக்கப்படுத்துங்கள். பெண் குழந்தைகளிடம் சேரக்கூடாது, பேசக்கூடாது என்று மிரட்டி வைக்காதீர்கள்.

அதே போல பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளிடம் பேச விடுங்கள் ஆண், பெண் சமம் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் தூவுங்கள். இன்னொருவரின் மனம் அறிந்து செயல்படும் விதமாக, இன்னொருவரின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக்கொடுங்கள். சுயநலமாக தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பதை தவிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றியும் சிந்திக்க வழிவகையாக அமையும்.

பெண் குழந்தைகளை திட்டினாலோ அவர்களை மரியாதைக்குறைவாக நடத்தினாலோ கண்டியுங்கள். உன்னைப்போலவே தான் அவளும் என்பதை ஆண் குழந்தையிடம் புரிய வையுங்கள். ஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இல்லையேல் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்து விடும்.

ஆண் குழந்தை என்று சொல்லி, சொல்லியே அவர்கள் மீது பொறுப்புகளை திணிக்காமல் அவர்களை கொண்டாடுங்கள். நீ ஆண் பலசாலி, தைரியசாலி என்று அவன் மீது பெரும் பொறுப்புகளை திணிப்பதை தவிருங்கள். குழந்தைப் பருவத்தை ரசிக்கட்டும். கொண்டாடட்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் நல்ல பலனைத்தரும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker