தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைப்பேறு அடைவதில் இனி தடைகள் இல்லை..

தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு அடைவதில் உண்டாகும் தடைகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மையமானது நவீன செயற்கை முறை கருத்தரித்தலுக்காக அனைவராலும் நம்பிக்கையுடன் அணுகப்படும் மருத்துவமனையாக விளங்கி வருகிறது. தம்பதிகளின் பிரச்சினையை கச்சிதமாக கண்டறிந்து, அதற்கான தக்க ஆலோசனைகள் மற்றும் முறையான சிகிச்சைகளை அளித்து குழந்தை பேறு அடைய செய்வதே எங்கள் குறிக்கோள் என்று அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவணன் லட்சுமணன் தெரிவித்தார்.

சமீபத்தில் சென்னை ஏ.ஆர்.சி. மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர். சரவணன் லட்சுமணன் மற்றும் டாக்டர் மகாலட்சுமி சரவணன் ஆகியோர் சாதனை நிகழ்த்தி உள்ளனர். அதாவது, குழந்தைப்பேறு அடைவதில் ஆண்களுக்கு உள்ள குறைபாடுகள், அவர்களது ஆரோக்கியம், அதற்கான விழிப்புணர்வு ஆகியவை குறித்து வீடியோ காட்சி பதிவுகளில் பல்வேறு அரிய ஆலோசனைகளை வழங்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

மேற்கண்ட கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய ‘யூ-டியூப்’ வீடியோ காட்சிகளை உலக அளவில் நூற்றுக்கணக்கான நாடுகளில், 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்கள். அந்த வீடியோ பதிவுகளுக்காக ஏ.ஆர்.சி மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர் சரவணன் லட்சுமணன் மற்றும் டாக்டர் மகாலட்சுமி சரவணன் ஆகியோருக்கு ‘ஏசியா புக் ஆப் சாதனை’ விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு அடைவதில் உண்டாகும் தடைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றி டாக்டர் சரவணன் லட்சுமணன் அளித்த ஆலோசனைகள் வருமாறு :

திருமணமான தம்பதிகள் இயற்கையான குழந்தைப்பேறு கிடைக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்..?

30 வயதுக்குள் திருமணமான தம்பதிகள் இயற்கையான குழந்தைப்பேறுக்காக ஒரு வருட காலம் காத்திருக்கலாம் என்பது பொதுவானது. அதுவே, தம்பதிகளுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருந்தால் அவர்கள் ஆறு மாதங்கள் வரை பார்த்து விட்டு அதன் பின்னர் தக்க மருத்துவ ஆலோசனைகளை நாடலாம். ஆனால், தம்பதிகளுக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் தக்க மருத்துவ ஆலோசனையை நாடுவதே பாதுகாப்பான முறையாகும்.

இன்றைய காலகட்டத்தில் நிறைய தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிடைப்பதில் ஏன் காலதாமதம் உண்டாகிறது..?

முன்பெல்லாம் திருமணம் என்பது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 25 முதல் 30 வயதுக்குள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இன்றைய நாகரிக வளர்ச்சிகள் காரணமாக, இன்றைய சூழலில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் 30 முதல் 35 வயதுக்குள் திருமணம் செய்வது வழக்கமாகி விட்டது. குழந்தைப்பேறு என்பது வயது சார்ந்து செயல்படக்கூடிய காரணியாக உள்ள நிலையில், தக்க வயது கடந்த தாமத திருமணங்கள் குழந்தைப்பேறுக்கு முக்கியமான தடையாக அமைகிறது. குறிப்பாக, கல்வி, தொழில் மற்றும் உத்தியோகம் போன்றவற்றால் ஏற்படும் மனோ ரீதியான பாதிப்புகள் உடல் சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உணவுப்பழக்கம் போன்ற காரணங்களும் தடைகளாக அமைந்திருக்கின்றன.

பழைய காலத்தை ஒப்பிடும்போது இப்போது, இயற்கையான குழந்தை பிறப்பில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவ ரீதியான காரணங்கள் எவை..?

இன்றைய காலகட்டத்தில் சராசரியை விடவும் கூடுதலாக உடல் எடை உள்ள பெண்கள் குழந்தைப்பேறு தாமதம் காரணமாக எளிதில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவது, மாதவிடாய் கோளாறுகள், கருமுட்டை போதிய வளர்ச்சி அடையாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களும் காரணங்களாக உள்ளன. ‘பிரி மெரிட்டல் கவுன்சிலிங்’ என்று சொல்லப்படும் திருமணத்துக்கு முன்பு தக்க மருத்துவ ஆலோசனைகளை பெற்று அவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த சிக்கலுக்கு எளிதாக தீர்வு காண இயலும்.

இன்றைய மருத்துவ ரீதியான செயற்கை கருத்தரித்தல் முறைகள் பற்றி ..?

மருந்துகள் மூலம் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது, ஆரம்ப கட்ட சிகிச்சை முறையான ஐ.யு.ஐ (I.U.I Intra Uterine Insemination), பாதிப்புகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் IVF மற்றும் ICSI போன்ற நவீன சிகிச்சை முறைகள் உள்ளிட்ட அணுகுமுறைகள் மருத்துவ உலகில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

தாய்மை கனவை நனவாக்கும் நவீன மருத்துவம்

கருத்தரித்தலில் உள்ள குறைகளை அகற்றும் 3D லேப்ரோஸ்கோபி சிகிச்சை முதலில் சென்னை பிரசாந்த் ஆராய்ச்சி மையத்தில் உபயோகப்படுத்தப் பட்டது என்று தெரிவித்த மருத்துவர் கீதா ஹரிப்பிரியா, கருத்தரித்தல் குறைபாடுகளுக்கான பல்வேறு அதிநவீன சிகிச்சை முறைகள் பற்றி தெரிவித்ததாவது ERA இந்த முறையின் மூலம் கர்ப்பப்பையின் உள் சுவருக்கு, கருவை எந்த நாட்களில் ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிக அளவில் உள்ளது என்ற தகவலை துல்லியமாக கண்டறிய முடிகிறது.

CYSTOPLASMIC TRANSPER_ இந்த பிரத்தி யேக வழிமுறையை வயதான பெண்கள் அல்லது பல தடவைகள் I—-VF முறையில் தோல்வியுற்ற பெண்கள் ஆகியோருக்கு தானமாக பெறப்படும் கருமுட்டையிலிருந்து MITOCHONDRIA என்ற ஊக்க பொருட்களை மட்டும் பெற்று, தங்களுடைய மரபணுக்களைக்கொண்ட குழந்தைகளையே பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

PRP இந்த முறையின் மூலமாக மாதவிடாய் நின்றுபோகும் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கும்கூட, தக்க கருமுட்டையினை உருவாக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்படி செய்ய முடியும். குறிப்பாக, இந்த முறையில் கர்ப்பப்பை உள்புற சுவர் வளரவும், விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker