நாவூற வைக்கும் மலபார் இறால் கறி
கேரளாவின் மிகவும் பிரசித்த பெற்ற சுவையான மலபார் இறால் கறி எளிதாக எப்படி நம் வீட்டிலேயே சமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
* இறால் – 300 கிராம்
* மாங்காய் – 1
* இஞ்சி – 1
* பச்சை மிளகாய் – 5
* தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
குழம்பு செய்ய:
* தேங்காய் – 1
* மிளகாய்தூள் – தேவையான அளவு
* மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி
* சீரகம் – 1 தேக்கரண்டி
* வெந்தயத்தூள் – அரை தேக்கரண்டி
* சின்ன வெங்காயம் – 50 கிராம்
* கறிவேப்பிலை – தேவையான அளவு
* உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.
* மாங்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* தேங்காயை துருவிக்கொள்ளவும்.
* இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குழம்புக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் இறாலை போட்டு அதனுடன் மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி அடுப்பில் வைத்து மூடிவைத்து சிறிது வேக விடவும்.
* இறால் வெந்ததும் அதோடு அரைத்து வைத்த மசாலாவைத் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து நன்கு வேக விடவும்.
* கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
* பின்னர் மிதமான தீயில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து அதோடு சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.
* இப்போது சுவையான மலபார் இறால் கறி தயார்.
* இது ஆப்பம், இட்லி, தோசை, சோறு என அனைத்து உணவிற்கும் மலபார் இறால் கறி அருமையாக இருக்கும்.