பெண்களுக்கு மட்டும்..!
பெண்கள் என்னதான் ஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் மாதத்தில் இரண்டு மூன்று நாட்களில் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையின் பொழுது உடலளவில் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். காரணம் அவர்களுக்கு ஏற்படும் மிகுந்த வலி.
இந்த வலி காரணமாக அவர்கள் சில குளிர்பானங்களை எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால் இதையெல்லாம் விட மிக சுலபமாக கிடைக்கும் சில இயற்கை மருந்துகளை எடுத்துக்கொண்டாலே வயிற்று வலி விரைவில் குறையும்.
இந்த வகையில், சோற்று கற்றாழையோட சதை பகுதியை எடுத்து அதை சுத்தம் செய்து அதோடு கொஞ்சம் பனங்கற்கண்டையும் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வலி நீங்கி ரத்தப்போக்கையும் குறைக்கும்.
அடுத்து, கைப்பிடி அளவிற்கு புதினாவை எடுத்துக்கொண்டு அதோடு எலுமிச்சை சாறுடன் அரைத்தபிறகு தேவையான அளவிற்கு பனங்கற்கண்டுடன் சேர்த்து வலியின் பொழுது சாப்பிட்டால் வயிற்று வலி குறையும்.
வாழைப்பூவை பொரியலாக காரம் குறைத்து சமைத்து சாப்பிட்டாலும், அல்லது வெறும் வாழைப்பூவை மிக்ஸியில் அரைத்து குடித்தாலும் வயிற்று வலி தீரும்.
சோம்பு கொஞ்சம் எடுத்து அதை நன்கு பொடியாக்கி தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது மதியம் சாப்பிட்ட பின்பு இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை குடித்து வந்தால் வயிற்று வலி நீங்கும்.