சமையல் குறிப்புகள்புதியவை
குழந்தைகளுக்கு விருப்பமான நுங்கு புட்டிங்
கோடைகாலத்தில் கிடைக்கும் நுங்கில் பல்வேறு சுவையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று நுங்கை வைத்து புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நுங்கு – 10,
பால் – ஒரு கப்,
வெனிலா எசன்ஸ் – சிறிதளவு,
சைனா கிராஸ் – 1 டீஸ்பூன்,
சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை:
நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்
பாலை நன்றாக சுண்ட காய்ச்சி ஆறவைக்கவும்.
சைனா கிராஸை கால் கப் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.
பாலுடன் வெனிலா எசன்ஸ், சர்க்கரை, சைனா கிராஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
சர்க்கரை கரைந்த பிறகு நுங்குத் துண்டுகள் சேர்த்து கலக்கவும்.
சிறிய கண்ணாடி கிண்ணங்களில் ஊற்றி ஃப்ரீசரில் 6 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
பிறகு ஒரு தட்டில் கிண்ணத்தை கவிழ்த்து பரிமாறவும்.