ஆரோக்கியம்புதியவை

வெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா?… இத பண்ணுங்க… சும்மா குளுகுளுன்னு இருக்கும்…

அடிக்கிற உச்சி வெயில்ல வீட்டை விட்டு வெளியில போயிட்டு திரும்ப வர்றதுக்குள்ள மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குதா?… அதுமட்டுமில்லாமல் அக்னி வெயிலால் உடம்பெல்லாம் தீயாக கொதிக்குதா?… இதுக்கு ஒரு நாளைக்கு ரெண்டு முறை குளிச்சா மட்டும் போதாது. வெயில் பட்ட இடமெல்லாம் தோல் வெந்தது மாதிரி எரிச்சல் இருக்கும். அதுக்கு கண்ட ஆயின்மென்ட் வாங்கி தடவிக்கிட்டு இருப்போம். அதெல்லாம் இனி பண்ணாதீங்க… அப்புறம் என்னதான் பண்றதுன்னு கேட்கறீங்களா?…
இதோ வீட்ல இருக்கிற சின்ன சின்ன பொருள்களை வெச்சே அந்த காயங்களை சரி செஞ்சிடலாம்? ஐஸ் பேக் சம்மர் வெயில்ல எப்பவுமே நம்ம வீட்ல ஐஸ் வெச்சிருப்போம். அந்த ஐஸ் கட்டிகளை எடுத்து வெயில் சுட்ட, காயங்கள் உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுங்க. ரத்தம் வெளியேறாமல் உறையும். பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக ஐஸ் பேக்குகளை வைக்காதீர்கள். ஒரு மெல்லிய மஸ்லின் துணியில் சுற்றி, அதன்பின் ஒத்தடம் கொடுங்கள். தேன் தேன் ஒரு சிறந்த மாய்ச்சரைஸராகப் பயன்படும். இது வெயிலால் உண்டாகும் தழும்புகள் மற்றும் சருமத்தில் உண்டாக்கும் வீக்கங்களையும் போக்கும் ஆற்றல் கொண்டது.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் சிறந்த ஆன்டி பாக்டீரியலாக செயல்படுகிறது. இது சூரியனின் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் எரிச்சலையும் சரும பாதிப்புகளையும் சரிசெய்கிறது. ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அதை ஒரு காட்டனில் நனைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். கிரீன் டீ கிரீன் டீ பேக்குகளில் டானிக் அமிலங்கள் நிறைந்துள்ளன.

ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் சில கிரீன் டீ பேக்குகளை உள்ளே போடுங்கள். அதிலுள்ள டிக்காஷன் முழுவதும் இறங்கியதும் குளிர வையுங்கள். பின் அந்த நீரை சுத்தமான துணியில் நனைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் கொடுங்கள். யோகர்ட் யோகர்ட்டில் உள்ள அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள வெப்பத்தைப் போக்கி, உடலைக் குளிர்விக்கும். சருமத் தொற்றுக்கள் உண்டாகாமல் பாதுகாக்கும். கொஞ்சம் யோகர்ட்டை எடுத்து சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாகத் தடவுங்கள்.

அதன்பின், காயவிட்டு, வெதுவெதுப்பாக நீர் விட்டு துடைத்து எடுத்துவிடுங்கள். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கில் ஸ்டார்ச்அதிக அளவில் உள்ளது. இது வெயிலால் உண்டாகும் சருமப் பிரச்னைகளைத் தீர்த்து, தொற்றுக்கள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். உருளைக்கிழங்கை மெல்லிய வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி, சருமத்தின் பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்தால், நன்கு தேய்த்து விட வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு சருமத்தைக் கழுவுங்கள். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் சருமப் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதான். பாதிக்கப்பட்ட இடத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து தடவி, உலர விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு சருமத்தை அலசுங்கள்.



முட்டை வெள்ளைக்கரு முட்டையின் வெள்ளைக்கரு சரும எரிச்சலை போக்கும் தன்மை கொண்டது. மஞ்சள் கருவை மட்டும் தனியே எடுத்துவிட்டு, வெள்ளைக்கருவை நேரடியாக சருமத்தில் அப்ளை செய்யுங்கள். சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், சருமம் சிவந்து இருந்தாலும் அவற்றை சரிசெய்து விடும். வெறும் வெள்ளைக்கரு மட்டுமில்லாமல் இதனுடன் சிறிது தேனும் கலந்து பயன்படுத்தலாம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker