புதியவைமருத்துவம்

தைராய்டு பிரச்சனை உள்ள கர்ப்பிணிகளின் கவனத்திற்கு

கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருந்தால், கர்ப்ப காலமானது மிகவும் கஷ்ட காலமாக இருக்கும். இந்த பிரச்சனைக்கு எந்த வகையான உணவை எடுத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

இன்றைய காலத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் தைராய்டு. அதிலும் ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரக்கப்படும் பிரச்சனையால் தான் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள்.

குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருந்தால், கர்ப்ப காலமானது மிகவும் கஷ்ட காலமாக இருக்கும். மேலும் இது கருவிற்கு மட்டுமின்றி, தாய்க்கும் பல பிரச்சனைகளைக் கொடுக்கும். அதிலும் கருச்சிதைவு ஏற்படவோ அல்லது மூளையின் வளர்ச்சியில் குறைபாட்டையோ ஏற்படுத்தும்.

எனவே ஹைப்போ-தைராய்டிசம் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவதோடு, அதனை சரியான அளவில் பராமரித்து வர வேண்டும். முக்கியமாக தைராய்டு பிரச்சனை ஒருமுறை வந்தால், அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

இப்போது தைராய்டிசம் கொண்ட கர்ப்பிணிகளுக்கான சில இயற்கை வைத்திய முறைகளை பார்க்கலாம்.2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை 1 டம்ளர் பாலில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனின் உற்பத்தி அதிகரித்து, தைராய்டு ஹார்மோனை சீராகப் பராமரிக்கலாம்.

முட்டையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை சீராக வைக்க உதவும். அதேப்போல் கேரட், பூசணிக்காய் போன்றவற்றை உட்கொண்டு வருவதன் மூலமும் தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். ஆனால் இவற்றை கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

இந்த காய்கறிகளில் எல்லாம், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். அதுவும் தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்சாதவாறு செய்து, தைராய்டு ஹார்மோனின் கூட்டுச்சேர்க்கையைத் தடுக்கும்.

இஞ்சி டீ அல்லது பட்டை டீ குடித்து வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். அதே சமயம் காபி, டீ மற்றும் கார்போனேட்டட் பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

முழு கோதுமையால் செய்யப்பட்ட ஓட்ஸ், பார்லி, கோதுமை பிரட், செரில் போன்றவற்றை உட்கொண்டு வருவதன் மூலம், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தலாம். அதே நேரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை பிரட், சாதம் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், தைராய்டு பிரச்சனைகள் ஆரம்பமாகும். எனவே அதிகாலையில் எழுந்து சூரியனிடமிருந்து கிடைக்கும் வைட்டமின் டியை 15 நிமிடம் நின்று தவறாமல் பெற்று வாருங்கள். இதனால் வைட்டமின் டி அதிகரிப்பதோடு, கால்சியம் சத்தை உடல் உறிஞ்சி எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker