சமையல் குறிப்புகள்புதியவை
குழந்தைகளுக்கு சத்து நிறைந்த மாம்பழ சால்சா
மாம்பழ சீசன் தொடங்கி விட்டது. இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சூப்பரான சத்தான சால்சா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மாம்பழம் – 1
ப.மிளகாய் – 1
வெங்காயம் – 1
எலுமிச்சை சாறு – 1டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
மாம்பழத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய மாம்பழம், ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு போட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான மாம்பழ சால்சா ரெடி.