சமையல் குறிப்புகள்புதியவை
சத்து நிறைந்த பப்பாளி லெமன் ஜூஸ்
பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. பப்பாளி லெமன் ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கனிந்த பப்பாளி – 2 கப் (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
பப்பாளியை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிக்ஸியில் பப்பாளி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் ஐஸ் தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்து பரிமாறினால் பப்பாளி லெமன் ஜூஸ் ரெடி!