உறவுகள்

குடும்பத்துல எப்பவும் சந்தோஷம் இருக்கணும்னா இந்த 12 இருக்கணும்… உங்க வீட்ல இருக்கா?…

நம்முடைய குடும்ப வாழ்க்கை சுமூகமாக செல்ல வேண்டுமானால் வீட்டுக்குள் நம்முடைய குடும்பத்துக்கென சில விதிமுறைகளையும் கட்டப்பாடுகளையும் அமைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளை படிப்பு, விளையாட்டு ஆகியவற்றுக்கு தனித்தனியே விதிமுறைகளை வகுத்துக் கொடுங்கள். பிள்ளைகள் முன் கணவன், மனைவி சச்சரவுகளை தவிர்க்க வேண்டும்.

பொருளாதார நிர்வாகத்தில் இருவரும் பொறுப்பாக செயல்படுங்கள். அவை குடும்பத்தை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். இந்த புத்திசாலித்தனமான, அறிவை வளர்க்கக் கூடிய விதிகள் பெற்றோரால் பரிசோதித்து ஒப்புதல் வழங்கப்பட்டவையாகும்.

கதவை தட்டுங்கள்

மூடிய கதவை திறப்பதற்கு முன் கதவை தட்ட வேண்டும் என்பதை எல்லோரும் பின்பற்ற வேண்டும். நம்முடைய வீட்டு ஆட்களாக இருந்தாலும் அவரவர்களுக்கு என்று சுயமான விஷயங்கள் நிறைய உண்டு. அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.கவலை

தற்செயலாக நடக்கும் எந்த ஒரு விஷயத்துக்காகவும் அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட்டுக் கொண்டு, முடங்கிவிடக் கூடாது. அதை ஒரு சிறந்த அனுபவமாக மட்டுமே நினைத்துக் கொண்டு, அதிலிருந்து மீண்டு அடுத்த வேலையைத் தொடர வேண்டும்.

வாய்ப்பு

வேலை, உரிமை எதுவாக இருந்தாலும் மற்றவர்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். நாம் அடுத்தவர்களுக்கு கொடுக்கும் மரியாதை தான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். அதேபோல் அவர்களுடைய வுலையை சாதாரணமாக எடை போட்டுவிடக் கூடாது. அங்கீகரிப்பது மிக அவசியம். அதுதான் மற்றவர்களை நம்முடன் ஒன்றிணைக்கும்.

இரவு உணவு

உங்களுக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு உணவை இரவு உணவாக சாப்பிடக் கொடுக்கும்போது, “நன்றி, எனக்கு வேண்டாம்” என்று கூறி, கொடுக்கப்பட்ட உணவை ஒரு பிடியாவது எடுத்து உண்ண வேண்டும். வேண்டாம் என்று வெறுமனே முகத்தில் அடித்ததுபோல் சொல்லிவிட்டால் சமைத்தவர் மனம் வருத்தப்படும்.வீக் எண்ட் மீட்டிங்

யார் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் வாரத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு மீட்டிங் நடத்த வேண்டும். அதில் அவரவரின் அடுத்த வார வேலை குறித்து பகிர்நு்து கொண்டால் ஒருவர் மற்றவரை தொந்தரவு செய்யாமல் இருக்கலாம்.

சுமை

எங்காவது வெளியில் செல்வதென்றால் அவரவர் அவரவருக்குத் தேவையான எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவர்களே எடுத்துச் செல்வது நல்லது. சில சமயம் யாராவது நிறைய பொருள்களை எடுத்து வைத்துவிட்டு, கையை வீசுிக்கொண்டு வருவார்கள். வீட்டிலுள்ள மற்றவர்கள் அதை சுமந்து வருவார்கள்.

பெயர் சொல்லி அழைக்கக் கூடாது

வீட்டிலுள்ள பெரியவர்களை பிள்ளைகள் பெயரை அழைப்பதற்கு பழக்கப்படுத்தக்கூடாது. இதை பெரியவர்களும் கடைபிடிப்பது நல்லது. அதற்கு பதிலாக உறவுமுறையை சொல்லி அழைப்பது தான் நல்லது.

தொலைக்காட்சி பார்த்தல்

வீட்டில் காலையில் பள்ளிக்கு செல்லும் நேரங்களில், ஏன் வாரத்தின் வேலை நாட்களில் வீட்டில் உள்ள யாருமே டீவி பார்க்கக் கூடாது என்ற விதியை பின்பற்றுங்கள். வேண்டுமானால் மாலை நேரங்களில் சிறிது நேரம் பார்த்துக் கொள்ளலாம். இந்த விதி குழந்தைகளுக்கு மட்டுமல்ல. வீட்டிலுள்ள அனைவருக்குமே பொருந்தும். இதனால் பள்ளி, அலுவலகம் என எல்லா இடத்துக்கும் சரியான நேரத்துக்குச் சென்று சேர முடியும்.

திடீர் திட்டங்கள்

பொதுவாக எல்லா வீடுகளிலும் மாதாமாதம் பட்ஜெட் போடுவார்கள். அதேபோல நம்முடைய வீட்டுக்கென்று சில திட்டங்கள் பொதுவாக வகுத்து, தை பின்பற்றி வருவோம். அந்த பட்ஜெட்டுக்குள் இல்லா ஒரு விஷயத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அது வீணாக பொருளாதார பிரச்னைக்கு வழிவகுக்கும். தேவையில்லாத விவாதங்கள் உண்டாக வழிவகுக்கும்.தூய்மை

எல்லா இடத்தையும் தூய்மையாக வைக்க முயற்சி செய்யுங்கள். வீட்டிலுள்ள யாராவது செய்வார்கள் என்று நினைக்காமல் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்து செய்யுங்கள். குறிப்பாக, பொங்கி வழியும் குப்பை தொட்டி, கழுவும் இடத்தில் நிரம்பியிருக்கும் பாத்திரங்கள், அழுக்கு துணிகள் இருக்கும் பெட்டி , இவை எல்லாவற்றையும் உடனுக்குடன் சுத்தம் செய்யப் பழகுங்கள்.

பொருள்களை கையாளுதல்

ஒரு பொருளை எடுத்தால், பயன்படுத்திவிட்டு மீண்டும் அதே இடத்தில் வையுங்கள். பெரும்பாலும் ஆண்கள் இந்த வேலையை ஒழுங்காக செய்வதே கிடையாது. எடுத்த பொருளை ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு, வீட்டிலுள்ள பெண்கள் எடுத்து வைத்துவிடுவார்கள் என்று போய்விடுவார்கள். திரும்ப அதே பொருளைத் தேடும்போது வாக்குவாதம் உண்டாகும். இதை தவிர்ப்பது நல்லது.

வேலை பகிர்வு

வீட்டைப் பொறுத்தவரை, ஆண்,பெண் பாகுபாடும் ஈகோவும் இருக்கக்கூடாது. இது ஆணுடைய வேலை , பெண்ணுடைய வேலை என்று எதுவுமே இல்லை. எல்லாமே வேலை மட்டும் தான். அதனை முடிக்கும் வரை அனைவரும் சேர்ந்து அந்த வேலையை செய்ய வேண்டும். இந்த விஷயங்களையெல்லாம் ஃபாலோ பண்ணினாலே குடும்பத்தில் எப்போதும் குதூகலம் இருக்கும். சண்டை சச்சரவு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker