தாய்மை-குழந்தை பராமரிப்பு

பச்சிளம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

இன்றைக்கு பலரது ஸ்ட்ரஸ் பூஸ்டரே சாப்பிடுவதாகத்தான் இருக்கிறது. கண்டதையும் கண்ட நேரத்தில் சாப்பிடுகிறார்கள். அதோடு அவர்களுக்கு உடல் உழைப்பு என்பது முற்றிலும் இல்லாத இந்த நவீன யுகத்தில் இதனால் பல்வேறு உபாதைகளை சந்திக்க நேரிடும்.

அதே நேரத்தில் ஜங்க் ஃபுட் அதிகம் விரும்பி ஏற்கப்படுவதால் அதனால் ஏற்படுகிற தாக்கங்களும் அதிகம். உடலுக்கு தேவையான சரிவிகித சத்துக்களும் கிடைக்காமல் போவதால் உடலளவில் பலவீனமாக உணர்வீர்கள் சில நேரங்களில் மனதளவிலும் மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.

உணவு ஒவ்வாமையினால் ஏற்படுகிற பின்விளைவுகளில் முதன்மையானது வயிற்றுப் போக்கு, வயிற்றுப் போக்கினால் உடலில் இருக்கக்கூடிய சத்துக்கள் அபரிதமாக வெளியேறும் அதனால் நீங்கள் சோர்வாகவும் இருப்பீர்கள். இதனை சமாளிக்க இதிலிருந்து மீண்டு வர நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கே பகிர்ந்திருக்கிறோம்.வயிற்றுப் போக்கு :

உங்களது அன்றாட வேலையையே முடக்கிப்போடும் அளவிற்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் மிகச் சோர்வாக உணர்வீர்கள். வயிற்றுப் போக்கு ஏற்பட சில அடிப்படை காரணங்கள் இருக்கின்றன.

1. சுத்தமற்ற குடிநீர் குடிப்பது.

2. மதுப்பழக்கம், நீண்ட நாட்களாக மாத்திரைகள் சாப்பிடுவது.

3. மன அழுத்தம்

4.வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று.

5.கெட்டுப்போன உணவுகள்,நீண்ட காலங்களாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது.

6.அளவுக்கு அதிமாக உண்பது.

7.தவறான அல்லது பொருத்தமற்ற உணவுகளை உண்பது.

செய்யக்கூடாதவை :

வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சோர்வாக உணரும் தருணங்களில் கீழ் கூறியவற்றை எல்லாம் செய்யாதீர்கள். இப்படிச் செய்வதினால் இன்னும் தீவிரமாகுமே தவிர வயிற்றுப் போக்கு குறையாது. மது,கேஸ் நிரம்பிய பானங்கள்,காபி ஆகியவை குடிக்கக்கூடாது. கொழுப்பு நிறைந்த உணவுகள், பிரட்,பாக்கெட் உணவுகளை தவிர்க்கவும், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதனை பயன்படுத்தும் பட்சத்தில் அது வயிற்றுப்போக்கினை இன்னும் அதிகமாக்கும் சில நேரங்களில் வயிற்றில் கேஸை உருவாக்கி தொல்லையை கொடுக்கும்.குழந்தைகளுக்கு :

வயிற்றுப் போக்கு வளரும் இளம் பருவத்தினருக்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனையாக இருக்காது. இரண்டு அல்லது அதற்கு மேலும் இந்தப் பிரச்சனை தொடர்ந்தால் மருத்துவரிடத்தில் காண்பித்து மாத்திரை சாப்பிடலாம். ஆனால் வயிற்றுப்போக்கு குழந்தைகளுக்கு ஏற்பட்டால்?

அதுவும் பச்சிளம் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட உணவைத்தான் கொடுக்க முடியும்.அதைச் சாப்பிட்டு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுவிட்டால் இது மிகவும் ஆபத்து.

விழிப்புணர்வு :

பெரியவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் என்ன சாப்பிட வேண்டும், என்ன தவிர்க்கவேண்டும் போன்ற விழிப்புணர்வு இருக்கிறது, ஆனால் குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று பெரும்பாலும் தெரிவதில்லை. நீங்கள் சாப்பிடும் உணவுப்பழக்கம், குடிக்கும் குடிநீர் உங்களையும் உங்களது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பராமரிப்பதிலேயே இதனை நீங்கள் தவிர்க்கலாம்.

குழந்தைக்கு ஏற்பட காரணங்கள் :

குழந்தைக்கு முதன் முதலாக பல் முளைக்கும் போது வயிற்றுப் போக்கு ஏற்படக்கூடும், அதேபோல தாய்ப்பால் மட்டுமே குடித்துக் கொண்டிருந்த குழந்தை திட உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் நேரத்திலும் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூடும். உணவு சரியாக செரிக்கவில்லை என்றால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதைத் தவிர தொற்று, வைரஸ் பாதிப்புகள், ஆகியவையும் முக்கிய காரணங்களாக இருக்கிறது.

உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு உண்டானாலோ தொடர்ந்து அதிகப்படியான மருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும்.சுத்தம் :

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்த சில அடிப்படையான விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

குழந்தை கையில் கிடைப்பதையெல்லாம் வாயில் வைக்கும். அதனால் எப்போதும் குழந்தையிருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும், அடிக்கடி குழந்தையின் கைகளை சுத்தமாக துடைத்துக் கொண்டேயிருங்கள்.

அரிசிக் கஞ்சி :

வயிற்றுப் போக்கு ஏற்பட்ட குழந்தைகளுக்கு இது வழங்கலாம். இதனை நீங்கள் எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும்.முதலில் அரிசியை அறைத்து பொடி செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு டம்பளர் தண்ணீரில் போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.

நன்றாக கொதித்ததும் அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் கூடுதலாக இரண்டு டம்பளர் தண்ணீரை சேர்த்திடுங்கள். லேசாக கொதி வந்ததும் இறக்கிவிடலாம். அந்த நீர் குடித்துப் பார்க்கும் போது உப்பு குறைவாகவே இருக்கட்டும். நாம் சாப்பிடும் உப்பு அளவிற்கு குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

உணவு கொடுக்கும் முறை :

பெரும்பாலான பெற்றோர்கள் செய்கிற தவறு இது, குழந்தைக்கு வலுக்கட்டாயமாக சாப்பாடு ஊட்டுவார்கள். அதிலும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுவிட்டால் சொல்லவே வேண்டாம்…. அப்படியெல்லாம் குழந்தைகளை வர்புறுத்தி சாப்பாடு கொடுக்கக்கூடாது.

வாழைப்பழம் :

திட உணவுகள் சாப்பிட ஆரம்பித்துவிட்ட குழந்தையென்றால் எளிதாக செரிக்கக்கூடிய உணவுகளை தொடர்ந்து கொடுக்கலாம். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு வேக வைத்த கேரட் சாதம், வாழைப்பழம் ஆகியவை கொடுக்கலாம். வாழைப்பழம் எளிதில் ஜீரணமாகும்.

அதில் அதிகப்படியான பொட்டாசியம் இருக்கிறது. வயிற்றுப் போக்கு ஏற்பட்ட நேரத்தில் உடலில் இருக்கும் தண்ணீர் சத்து எலக்ட்ரோலைட்ஸ் எல்லாம் மிகவும் குறைந்திருக்கும் அதனை ஈடுகட்ட வாழைப்பழம் சாப்பிடலாம்.

தாய்ப்பால் :

தாய்ப்பால் குடிக்கிற குழந்தை என்றால், வயிற்றுப் போக்கு ஏற்பட்ட சமயத்தில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலமாகத்தான் நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன் மூலமாகத்தான் உடலில் ஏற்பட்டிருக்கக் கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றினை அழிக்கும். 6 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையென்றால் நீங்களாக எந்த கை மருத்துவத்தையோ அல்லது மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்.தயிர் :

தயிரில் சிறிதளவு தண்ணீர் கலந்து குடிக்கவைக்கலாம். இதிலிருக்கும் நல்ல பேக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று கெட்ட பேக்டீரியாவை அழித்திடும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு சர்க்கரை மற்றும் உப்பு பயன்படுத்தும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை கொடுப்பது நல்லது. அவர்களின் நீர்ச்சத்து குறைந்திடாமல் இருக்க இளநீர் கொடுக்கலாம்.

ஆண்ட்டிபயாட்டிக் :

குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஆரம்பித்தவுடனேயே ஆண்ட்டிபயாட்டிக் கொடுக்காதீர்கள். அல்லது வயிற்றுப் போக்கினை நிறுத்த மருந்து கொடுக்காதீர்கள். சில சமயங்களில் தானாகவே சரியாகிற அதாவது ஒன்று அல்லது இரண்டு முறை வயிற்றுப் போக்கு ஏற்பட்ட பிறகு தானாகவே சரியாகிவிடுகிற பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கும் போது நீங்கள் கூடுதலாக மருந்தினைக் கொடுத்து இரட்டிப்பாக்கி விடுவீர்கள். மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், மருந்து கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்னவென்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மாதுளம் பழச்சாறு :

வயிற்றுப் போக்கு கட்டுப்படுத்தம், உடனடி எனர்ஜிக்கும் மாதுளம் பழம் பெஸ்ட் சாய்ஸ். பழங்களை கடித்துச் சாப்பிடும் வயது என்றால் பழத்தை உரித்து அப்படியே கொடுக்கலாம். பச்சிளம் குழந்தைகள் என்றால் மாதுளம் பழத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள் பின் அதனை வடிகட்டி கொடுக்கலாம்.

ஆப்பிள் :

ஆப்பிளை தோல் நீக்கி சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். அதனை ஒரு டம்பளர் நீரில் சேர்த்து வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் அடுப்பை அனைத்துவிடலாம். ஆப்பிள் நன்றாக குலைந்து போயிருக்கும். அதை ஸ்பூனைக் கொண்டு மசித்து அந்த தண்ணீருடன் சேர்த்து குழந்தைக்கு ஊட்டலாம். இதனை மொத்தமாக செய்து வைக்கமால் அவ்வப்போது சூடாக செய்து கொடுப்பது சிறந்தது.

புதினா :

புதினாவில் நிறைய ஆண்ட்டி பேக்டிரியல் துகள்கள் நிறையவே இருக்கின்றன. வயிற்றுப் போக்கின் சமயத்தில் புதினாச்சாறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவை வயிற்றிலிருக்கும் பேக்டீரியாவை அழிப்பதுடன் உணவை நன்றாக செரிக்கவும் வைத்திடும். புதினா இலைகளை கசக்கி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேன் அல்லது தண்ணீர் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இரண்டு வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இது கொடுக்கலாம்.எலுமிச்சை சாறு :

பெரியவர்களுக்கும் இதைக் கொடுக்கலாம். எலுமிச்சை சாறு,வயிற்றுக் கோளாறினை சரி செய்ய உதவுவதுடன், உடலில் பிஎச் அளவு சரியாக மெயிண்டெயின் செய்யவும் உதவிடுகிறது. ஒரே நேரத்தில் ஒரு டம்பளர் முழுவதையும் குடிக்க வைக்க வேண்டாம்.ஒரு நாளைக்கு நான்கைந்து முறையென ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் ஜூஸ் கொடுக்கலாம்.

பால் :

வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கும் சமயத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை தவிர்த்திடுங்கள். அதாவது பாக்கெட் பால், பவுடர் பால், பசும்பால் என பிற பால்களை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனென்றால் பால் சரியாக செரிமானம் ஆகாமல் அது வயிற்றுப் போக்கினை அதிகரித்து விடும்.

ஸ்டார்ச் :

திட உணவுகள் சாப்பிட ஆரம்பித்துவிட்ட குழந்தைகளுக்கு இதை முயற்சி செய்யலாம். வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை கொடுத்திடுங்கள். இது குழந்தைகளுக்கு எனர்ஜியைக் கொடுக்கும். குழந்தைகளுக்காக நீங்கள் தேர்ந்தெடுத்த உணவு ஸ்டார்ச் நிறைந்ததாகவும் அதே நேரத்தில் செரிமாணத்திற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். தால்,அரிசிச் சாதம் ஆகியவை கொடுக்கலாம்.

உருளைக் கிழங்கு :

உருளைக்கிழங்கும் ஸ்டார்ச் உணவுகளில் சேரும். உருளைக்கிழங்கினை தோல் சீவி வேக வைத்திடுங்கள். வேகும் போதே சிறிதளவு உப்பு சேர்த்திடுங்கள். நன்றாக குலைந்ததும் இறக்கிவிடலாம். அதை அப்படியே ஆற வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வேண்டுமானால் அதில் சிறிதளவு சீரகத்தூள் சேர்த்து மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.தேன் :

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையென்றால் தேன் கொடுக்கலாம். தேனை நேரடியாக கொடுப்பதை விட ஒரு டம்பளர் குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுக்க வேண்டும். இது வயிற்றுப் போக்கினை சரி செய்வதுடன், எனர்ஜியை மீட்டெடுக்கவும் உதவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker