இந்த ராசிக்காரங்க யாரையும் அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க மாட்டாங்க தெரியுமா?
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான குணங்கள் இருக்கும். சிலருக்கு கோபம் அதிகம் வரும், சிலர் மிகவும் அன்பானவராக இருப்பர், சிலருக்கு பொறாமை குணம் அதிகம் இருக்கும், சிலர் தனக்கு எவ்வளவு கெடுதல் செய்தாலும் மன்னித்துவிடுவார்கள், இன்னும் சிலர் யாரையும் எளிதில் மன்னிக்கமாட்டார்கள். ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட ராசிக்காரர்கள், தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அதை அவ்வளவு எளிதில் மறக்காமல் இருப்பதுடன், மன்னிக்கவும் மாட்டார்கள்.
தங்களது மனதை புண்படுத்தியவர்களை மற்றும் தங்களுக்கு கெடுதல் செய்தவர்களை மன்னிக்கமாட்டார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இக்கட்டுரையில் எந்த ராசிக்காரர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்களுக்கு பிடித்தவர்கள் இந்த பட்டியலில் இருந்தால், அவர்கள் மனதைப் புண்படுத்தியவாறு இனிமேல் பேசிவிடாதீர்கள். பின் அவர்களிடம் மன்னிப்பு கேட்டால் கிடைக்காது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவர்களது பிடிவாத குணத்தால், இந்த ராசிக்காரர்கள் அவ்வளவு எளிதில் மன்னிக்கமாட்டார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பமாட்டார்கள். அதே சமயம் தனக்கு யாரேனும் தீங்கு விளைவித்திருந்தால், அவர்களை உடனே பழி வாங்க வேண்டும் என்று நினைக்கவும் மாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களும் அவ்வளவு எளிதில் மற்றவர்களை மன்னிக்கமாட்டார்கள். மேலும் இவர்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், இவர்களது குணம் இப்படி தான் இருககும் என்று நினைத்து, அவர்களது பழக்கத்தையே விட்டுவிடுவர். அதோடு இந்த ராசிக்காரர்கள் முடிந்த அளவு பிரச்சனையை பெரிதாக்குவர். அதுவும் இந்த ராசிக்காரர்களிடம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால், காதில் விழாதவர்கள் போன்று பிரச்சனையை மேலும் பெரிதாக்க செய்து மன்னிக்கமாட்டார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்களுக்கு என்று ஒரு தரம் கொண்டிருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் அவ்வளவு சீக்கிரம் மன்னிக்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு யாரேனும் ஏதேனும் கெடுதல் செய்தாலோ அல்லது துரோகம் செய்தாலோ, அவர்களை இவர்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் மற்றும் அவ்வளவு எளிதில் செய்ததை மறக்கவும் மாட்டார்கள். எனவே இந்த ராசிக்காரர்கள் உங்களது நண்பர்களாகவோ அல்லது விருப்பமானவர்களாவோ இருந்தால், இவர்களிடம் சற்று கவனமாக, அவர்களது மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வெறும் மன்னிப்பை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. இந்த ராசிக்காரர்கள் சின்ன சின்ன விஷயங்களையும் தேவைகளை விட தனிப்பட்ட முறையில் எடுக்க முனைவார்கள். இந்த ராசிக்காரர்கள் போட்ட திட்டத்தை யாரேனும் தடை செய்தாலோ அல்லது முக்கியமான விஷயங்களை இவர்களிடம் சொல்வதற்கு மறந்தாலோ, இவர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாவார்கள். மேலும் இந்நிலையில் இந்த ராசிக்காரர்களின் மனதில் இவர்களுடனான முழு உறவு அல்லது நட்புறவும் பொய்யென எண்ண ஆரம்பித்துவிடுவார்கள். ஒருவேளை இந்த ராசிக்காரர்களிடம் தவறு செய்தோர் யாரேனும் மன்னிப்பு கேட்டால், மன்னிப்பு கேட்டோரின் மனதை புண்படுத்திய பின் தான் மன்னிப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மன்னித்தது போன்று நடிப்பார்களே தவிர, உண்மையில் இவர்கள் மனதளவில் மன்னிக்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்களிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவர்கள் செய்த தவறைச் சொல்லி காட்டி, எவ்வளவுக்கு எவ்வளவு பேசி மனதை காயப்படுத்த முடியுமோ, அவ்வளவு புண்படுத்தி, முடிந்த அளவு அவர்களை தலைகுனியச் செய்துவிடுவார்கள். அந்த அளவு மகர ராசிக்காரர்கள் கோபமானவர்களாக இருப்பர்.