ஆரோக்கியம்

அல்சர் இருப்பவர்கள் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

அனைத்து வயதினரும் சந்திக்கும் பொதுவான ஒரு பெரிய பிரச்சனை தான் வயிற்று அல்சர். இது இரைப்பைச் சுவற்றில் ஏற்படும் காயங்களினால் உண்டாவதாகும். ஹெலிகோபேக்டர் பைலோரி என்னும் பாக்டீரியல் தொற்றுக்களால் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் தொடர்ச்சியாக ஆஸ்பிரின், ஐபுப்ரோஃபென், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மருந்துகளை எடுத்தால், அவை வயிற்று அல்சரைத் தூண்டும்.

வயிற்று அல்சர் இருக்கும் போது மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொண்டும், சில உணவுகளைத் தவிர்க்கவும் வேண்டும். அல்சர் இருப்பவர்களுக்கு என்று டயட் எதுவும் இல்லை. ஆனால் சில உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம், ஆரோக்கியம் மேம்படும். இருப்பினும் ஒரு ஆராய்ச்சி குழுவினர் குறிப்பிட்ட சில உணவுகள் ஹேலிகோபேக்டர் பைலோரி என்னும் பாக்டீரியாவை எதிர்த்து, வயிற்று அல்சரில் இருந்து விடுவிப்பதாக கூறுகின்றனர்.இக்கட்டுரையில் வயிற்று அல்சர் உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவை உட்கொள்ள வேண்டுமென கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை அல்சர் பிரச்சனையின் போது உட்கொண்டு நன்மைப் பெறுங்கள்.

காலிஃப்ளவர்

மார்கெட்டுகளில் பொதுவாக காணப்படும் ஓர் காய்கறி தான் காலிஃப்ளவர். இதில் சல்போராஃபேன் என்னும் பைலோரி பாக்டீரியாவை எதிர்க்கும் பொருள் உள்ளது. ஆய்வு ஒன்றில் தினமும் 2 வேளை என 7 நாட்கள் தொடர்ந்து காலிஃப்ளவரை சாப்பிட்டு வந்ததில், 78% பாக்டீரியா குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காலிஃப்ளவரில் உள்ள உட்பொருட்கள் செரிமான பாதையில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் காலிஃப்ளவரில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது.

முட்டைக்கோஸ்

எஸ் மெத்தில் மெத்தியோனைன் என்னும் வைட்டமின் யூ, அல்சரை சரிசெய்யும். பொதுவாக அல்சரானது இரைப்பையில் உள்ள அமில அளவின் ஏற்றத்தாழ்வினால் வருவதாகும் மற்றும் இந்த வைட்டமின் உடலை காரத்தன்மைக்கு மாற்ற உதவும். மேலும் முட்டைக்கோஸில் உள்ள அமினோ அமிலமான க்ளுட்டமைன், அல்சரை சரிசெய்யவல்லது. இந்த பொருள் இரைப்பையில் உள்ள காயங்களை சரிசெய்வதோடு, வயிற்று தசைகளை வலிமையாக்கும். அதற்கு முட்டைக்கோஸை பச்சையாக அல்லது வேக வைத்து சாப்பிடலாம்.

முள்ளங்கி

முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவும் மற்றும் ஜிங்க் மற்றும் இதர கனிமச்சத்துக்களை உறிஞ்ச உதவும். ஆனால் வெள்ளை முள்ளங்கியை தினமும் சாப்பிட வேண்டாம். ஏனெனில் இது தாமதமாக செரிமானமாவதோடு, வாய்வுத் தொல்லையைத் தூண்டும். ஆப்பிள் ஆப்பிளை தினமும் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். ஏனெனில் இது வயிற்று அல்சர் இருந்தாலும், அதை குணப்படுத்துவதோடு, அல்சர் வராமலும் தடுக்கும். ஆப்பிளில் உள்ள ப்ளேவோனாய்டுகுள், பைலோரி பாக்டீரியாவில் வளர்ச்சியைத் தடுக்கும்.ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி பழங்களை காலையில் சாப்பிட்டால், அது வயிற்று அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக்ள மற்றும் ஊட்டச்சத்துக்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதோடு, அல்சரில் இருந்து விரைவில் குணமாக உதவும். ராஸ்ப்பெர்ரி ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரியில் அதிக அளவில் பீனோலிக் பொருள் உள்ளது. மேலும் இதில் வளமான அளவில் டயட்டரி நார்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, இரைப்பையில் உள்ள காயங்களைக் கட்டுப்படுத்தும்.

ஸ்ட்ராபெர்ரி

புதிய ஆய்வு ஒன்றில், ஸ்ட்ராப்பெர்ரி வயிற்று அல்சரை எதிர்த்து நல்ல பாதுகாப்பை அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அல்சரில் இருந்து உடலுக்கு பாதுகாப்பை வழங்கும். மேலும் இது இரைப்பை சுவற்றிற் நன்கு வலிமையாக்கும். அல்சர் இருப்பவர்கள், தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை சாப்பிட்டால், விரைவில் குணமாகலாம்.

குடைமிளகாய்

குடைமிளகாய் பெப்டிப் அல்சரில் இருந்து விடுவிக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு குடைமிளகாயை லேசாக வதக்கி, அன்றாட சாலட்டுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் அல்சரில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்.

கேரட்

கேரட் இரைப்பை சுவற்றை வலிமையாக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ, வயிற்று அல்சர், அஜீரண பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும். அதற்கு கேரட்டை பச்சையாகவோ அல்லது சூப் வடிவிலோ உட்கொள்ளலாம். இல்லாவிட்டால், கேரட்டைக் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் ஒரு டம்ளர் குடிக்கலாம்.ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் உள்ள குறிப்பிட்ட கெமிக்கல்கள், வயிற்று அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் உள்ள சல்போராஃபேன் தான் அல்சரை சரிசெய்கிறது. ஆகவே ப்ராக்கோலி கிடைத்தால், அதை வாங்கி அடிக்கடி சாப்பிடுங்கள்.

தயிர்

தயிர் ஆரோக்கியமான உணவுகளுள் ஒன்று. இதில் உள்ள புரோபயோடிக்குகள், லாக்டோபேசில்லஸ் மற்றும் அசிடோபில்லஸ் போன்றவை வயிற்று அல்சரை சரிசெய்ய உதவும். மேலும் தயிர் செரிமான மண்டலத்தில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, நல்ல பாக்டீரியாக்களை வளமான அளவில் வைத்துக் கொள்ளும். புரோபயோடிக்ஸ் தயிரில் மட்டுமின்றி, சோயா பொருட்களிலும் உள்ளது.

ஆலிவ் ஆயில் மற்றும் தாவர வகை எண்ணெய்

ஆய்வுகளில் ஆலிவ் ஆயில் வயிற்று அல்சரை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது. இதில் உள்ள பீனால்கள், ஆன்டி-பாக்டீரியல் ஏஜென்ட் போன்று செயல்பட்டு, பைலோரி பாக்டீரியாவைப் பரவாமல் தடுத்து, வயிற்று அல்சரில் இருந்து விடுவிக்கும். எனவே அல்சர் உள்ளவர்ள், அன்றாட சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொள்ளுங்கள்.

தேன்

தேன் பொலிவான சருமம் மற்றும் காயங்களைக் குணப்படுத்த மட்டும் பயன்படுவதில்லை. வயிற்று புண்ணையும் தான் சரிசெய்ய உதவுகிறது. தேன் உடலில் பாக்டீரியல் வளர்ச்சியைத் தடுத்து, வயிற்று அல்சரில் இருந்து நிவாரணம் அளிக்கும். உங்களுக்கு அல்சர் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1 டேபிள் ஸ்பூன் தேன் சாப்பிடுங்கள். இதனால் விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம்.

பூண்டு

சிறிய பூண்டு வயிற்று அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாவான பைலோரி பாக்டீரியாவை அழிக்கும் சக்தி கொண்டவை. பூண்டில் உள்ள குறிப்பிட்ட ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், வயிற்று அல்சரில் இருந்து விடுபட உதவும். அதற்கு அல்சர் இருப்பவர்கள் தினமும் 2 பல் பூண்டை காலையில் சாப்பிட வேண்டும்.க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள ECGC, அதாவது அதிக அளவிலான கேட்டசின்கள், வயிற்று அல்சரில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், அல்சரில் இருந்து விடுபட உதவும். ஆகவே தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு கப் க்ரீன் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

அதிமதுரம்

பழங்காலத்தில் அதிமதுரம் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் வயிற்று அல்சர் மற்றும் இரைப்பை அழற்சியை எதிர்த்துப் போராடும் சக்தி உள்ளது. மேலும் இதில் இருக்கும் அழற்சி எதிர்த்துப் பண்புகள், வயிற்றில் உள்ள காயங்கள் அல்லது அழற்சியைக் குறைக்கும். அதிமதுரத்தில் உள்ள வளமான அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வயிற்று அல்சரை சரிசெய்யும். முக்கியமாக இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, தொற்றுக்கள் பரவாமல் தடுக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளுடன், பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கேல் போன்றவற்றையும், வைட்டமின் பி மற்றும் கால்சியம் நிறைந்த பாதாம், செர்ரி போன்றவற்றையும் சாப்பிடலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker