அழகு..அழகு..புதியவை

என்ன மாதிரி ஹேர்கட் பண்றதுன்னு குழப்பமா இருக்கா?… இத ட்ரை பண்ணி பாருங்களேன்…

எந்த மாதிரி ஹேர்கட் பண்ணலாம்னு பெரிய குழப்பமா இருகு்கா?… யோசிச்சே களைத்துப் போய்விட்டீர்களா? எத்தனையோ வகை கூந்தல் அலங்கார ஸ்டைல்கள் தெரியும்தான்… ஆனால், அலங்காரம் செய்பவரிடம், ஒரு ஃபோட்டோவை காட்டி, “இதுபோல் வெட்டுங்கள்” என்று தெளிவாக சொல்வது எப்படி, என்பதுதான் உங்கள் கவலையா? கவலையை விடுங்கள்! எந்த வகை அலங்காரம் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் சரியான மாதிரிகளை காட்டுகிறோம்.

ஹேர்கட் டிசைன் இப்போதைய பேஷன் தொழில்நுட்ப உலகில் நாளுக்கொரு ஹேர்கட் டிரெண்ட் அறிமுகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. அதில் எதைத் தேர்ந்தெடுப்பது, எது நமக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதில் தான் பெரிய குழப்பமே வருகிறது. இனி அந்த கவலையை விடுங்கள்.நாங்கள் உங்களுக்கு எது பொருது்தமான இருக்கும் என சில ஹேர் ஸ்டைல்களை அறிமுகம் செய்கிறோம். அதை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம்உங்களை அது மகிழ்விக்கும். வாப் 2015-ம் ஆண்டில் பெயர் பெற்ற ‘வேவி பாப் ஸ்டைல்’ எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. அடர்த்தியான கூந்தல் உள்ளவர்களுக்கு ‘பிளண்ட் ஸ்டைல்’ பொருத்தமாக அமையும். எண்ட்ராஜினஸ் பிக்ஸி இறகுகளால் மூடப்பட்டது போன்று தோற்றமளிக்கும் ‘ஃபெதர் கட்’ மாதிரி, அனைத்து பாலினத்தவருக்கும் பொருத்தமானது. குறைந்த பராமரிப்பு போதுமான அலங்காரம் இது.



இந்த ஹேர் ஸ்டைலை பராமரிக்க பெரிதான ஒன்றும் மெனக்கெடத் தேவையிருக்காது. பௌல் கட், ரிடெக்ஸ் இயற்கையாக சுருட்டையான கூந்தல் கொண்டோருக்கு, முன் நெற்றியில் விழும்படியாக வெட்டப்பட்ட ‘ஷாகி பாப்’ மிகவும் நன்றாக இருக்கும். லேசாக அவ்வப்புாது முன் நெற்றியில் வந்து விம்போது கண்ணை மறைக்கும். நீங்களும் அதை அலட்சியமாக ஒதுக்கிவிடும்புாது தான் அதன் உண்மையான அழகே இருக்கிறது. பிஸ்ஸி எண்ட்ஸ் கூந்தல் நேராக இருக்கும்படியான அலங்காரத்தை நீங்கள் விரும்பினால், கூந்தலின் முனையை அதற்கான பிரத்தியேக கத்தரியை கொண்டு, ஃப்ரே என்னும் சீரற்ற முறையில் வெட்டும்படி கூறுங்கள். அது தற்போதைய முறையிலான அலங்காரமாக, நவீனமான தோற்றமளிக்கும்.

ஹீட் ப்ரொக்டண்ட் என்னும் வெப்ப தடுப்பு திரவம் பயன்படுத்தி இந்த வகை கூந்தல் அலங்காரம் செய்யப்படும். ஸ்வா எழுபதுகளில், அதாவது உங்கள் அம்மா காலத்திய கூந்தல் அலங்காரம், சற்று நவீனப்படுத்த முறையில் ‘ஸ்வா’ ஸ்டைலாக வந்துள்ளது. அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் முதல் நடிகையான எம்மா ஸ்டோன் வரையிலான பிரபலங்கள் இந்த வகையில் அலங்காரத்தை மேற்கொள்கின்றனர். அடுக்கடுக்காக, அசையும் வகையிலாக கூந்தல் கொண்டதாக இந்த அலங்காரம் அமையும். பிளன்ட் மிடி மிக நீளமானது முதல் சற்றே குட்டையான கூந்தல் வரை பொருத்தமானது பௌன்ஸி அலங்காரம். காலர் போன் அதாவது தோள்பட்டைக்கும் இரண்டு அங்குலம் இறக்கமாக இருப்பதுபோல் வெட்டும்படி கூறுங்கள். ரஃப் கட் அலை அலையான, அடுக்கடுக்கான, நுனியில் சீரற்ற விதத்தில் வெட்டப்பட்ட இவ்வகை அலங்காரம் இப்போதைய பாணியாகும். இயற்கையாகவே அலையலையான கூந்தல் கொண்டவர்களுக்கு இந்த அலங்காரம் சிறப்பாக அமையும். நேச்சுரல் பொஹிமியன் இயற்கையான சுருட்டை கூந்தலே தற்போதைய பொஹோ அலை என்ற அலங்காரம். நுனிப்பகுதியில் சற்றே கூந்தல் அளவை குறைத்து வெட்டும்படி கூறுங்கள். செவன்டீஸ் பேப் ‘ஸ்வா’ வகை அலங்காரத்தின் சற்று நீண்ட வடிவம். இக்காலத்தின் மிக நவீன டிரெண்டியான கூந்தல் அலங்காரம் இது. இவ்வகை அலங்காரத்தில் பீஸே என்னும் அடுக்குகள் நீண்டு வளர்ந்த கூந்தலின் தோற்றத்தை சற்றே மாறுதலாக காட்டும்.

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker