அஜீரணம், வயிற்று கோளாறை குணமாக்கும் ஓமம்
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
தாவர குடும்பத்தைச் சேர்ந்த ஓமம் மிகுந்த மணமுடையது. ஓமத்தில் விட்டமின் பி 1, 2, 3 மற்றும் பாஸ்பரஸ், இரும்பு, சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன.
* ஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.
* ஓம எண்ணெயுடன் லவங்க எண்ணெயைச் சேர்த்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் போகும்.
* ஓம எண்ணெயை தடவினால் மூட்டுவலி அறவே குறையும்.
* ஓம நீரைக் காய்ச்சி குடித்து வந்தால், கை, கால் நடுக்கம் குணமாகும். நல்லெண்ணெயுடன் பூண்டும் ஓமமும் சேர்த்துக் காய்ச்சி காதில் விட்டால் காதுவலி குறையும்.
* ஓமம் நச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
* ஓமத்தைப் பொடி செய்து கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகி வந்தால் இதயம் பலப்படும்.
* ஓம நீரில் ஆவி பிடித்து வந்தால் மூக்கடைப்பும், தலைபாரமும் நீங்கும்.
* ஓமத்தை வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் மார்பு வலி குறையும்.
* ஓமம் ஒரு சிறந்த கிருமி நாசினி.
ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும். வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
தொப்பையை குறைக்க தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்பூன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும். காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.