அழகு..அழகு..

நாம் செய்யும் சில மேக்கப் தவறுகள் வயதான தோற்றத்தை தருமா? தெரிஞ்சுக்க இத படிங்க

நமது சருமம் மற்றும் தோற்றத்தை அழகாக காட்டுவதில் நமது மேக்கப் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நாம் செய்யும் சில மேக்கப் தவறுகள் நம் இயற்கையான வயதை விட நம்மை வயதானவர்களாகக் காட்டி விடும்.

பெண்கள் மேக்கப் போடுவதே தங்கள் வயதை குறைத்து காட்டவே. ஆனால் அதில் அவர்கள் செய்யும் தவறுகள் அவர்களின் வயதை இன்னமும் கூட்டி காட்டுகிறது என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை. நீங்கள் போடும் மேக்கப் என்பது இருவழிப் பாதை மாதிரி. ஒன்னு உங்களை இளமையான பார்வைக்கு கொண்டு செல்லும் அல்லது நீங்கள் செய்யும் தவறுகளால் வயதானவர்களாக காட்டி விடும்.

எனவே மேக்கப்பில் நாங்கள் கூறும் சின்ன மாற்றங்கள் உங்கள் தோற்றத்தையே மாற்றப் போகிறது. இந்த மாற்றங்கள் கண்டிப்பாக உங்களை இளமையாக ஜொலிக்க வைக்கும்.வயதாவது என்பது ஒரு இயற்கையான செயல். கண்டிப்பாக அதை எல்லாரும் புரிந்து கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் அதை மறைக்க நீங்கள் போடும் தவறான மேக்கப் முறைகள் உங்களை இன்னமும் வயதாக காட்டி விடுகிறது என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும்.

எனவே மேக்கப்பில் நாங்கள் கூறும் சில மாற்றங்களை செய்து கொண்டால் கண்டிப்பாக உங்கள் தோற்றமும் அழகாக அமையும்.

பவுண்டேஷனை தவறாக பயன்படுத்துதல்

நமது சருமத்தின் தன்மைக்கு ஏற்ப நிறைய பவுண்டேஷன்கள் இருக்கின்றன. நமக்கு வயதாகிவிட்டால் நமது சருமம் அதன் மீட்சித்தன்மையையும், ஈரப்பதத்தையும் இழந்து விடும். எனவே அதிகமான பவுண்டேஷனைப் பயன்படுத்தி உங்கள் எண்ணெய் பசை மற்றும் இருக்கின்ற ஈரப்பதத்தையும் நீக்கி விடாதீர்கள். இதனால் உங்கள் சருமம் வறண்டு காணப்படும். இதனால் உங்கள் சரும சுருக்கங்கள், சரும கோடுகள் போன்றவை வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து விடும்.

பவுண்டேஷனை அப்ளே செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன. நிறைய பேர் பவுண்டேஷன் பிரஷ்ஷையோ அல்லது ஸ்பாஞ்ச்யையோ பயன்படுத்துகின்றனர். ஸ்பாஞ்ச்சை பயன்படுத்தும் போது உங்களுக்கு நல்ல ஒரு லுக் கிடைக்கும்.

மேக்கப் போடுவதற்குமுன் சருமத்தை தயார்படுத்திக் கொள்ளுங்கள்

நீங்கள் மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை தயார்படுத்திக் கொண்டால் உங்கள் மேக்கப் கச்சிதமாகவும், நீண்ட நேரம் கலையாமலும் இருக்கும். சருமத்தை தயார் செய்வது என்பது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி போதுமான ஈரப்பதத்தைக் கொடுத்து புத்துணர்வாக்க வேண்டும்.

மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்யாவிட்டால் உங்கள் மேக்கப் திட்டு திட்டாக காணப்படும் வாய்ப்புள்ளது. மேக்கப் போடுவதற்கு முன் ப்ரைமர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவை உங்கள் முகத்தில் உள்ள சருமத்துளைகளை மறைத்து ஒரு சமமான மேக்கப் அழகை கொடுக்கும்.கன்சீலரை தவறாகப் பயன்படுத்துதல்

இரண்டு வழிகளில் நீங்கள் கன்சீலரைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். ஒன்று அதிகமான கண்சீலர் பயன்படுத்துவது. இதனால் உங்கள் மேக்கப் பார்ப்பதற்கு கிரீஸ் லுக் கில் காணப்படும். உங்கள் சரும கோடுகளும் நன்றாக வெளியே தெரியும்.

மற்றொரு தவறு கன்சீலரை லேசாக பயன்படுத்துவது. லைட்டர் கன்சீலர் ஏதாவது ஒரு இடத்தை துடிப்பாக காட்ட மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் லேசாக கன்சீலரைப் பயன்படுத்தும் போது உங்கள் குறைபாடுகள் நன்றாக வெளியே தெரிய ஆரம்பித்துவிடும். எனவே சரியான அளவில் உங்கள் கண்களுக்குக் கன்சீலரைப் பயன்படுத்தி அழகு படுத்துங்கள். இதனால் உங்கள் கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களை எளிதாக மறைக்கலாம்.

அதிகமான ஃப்ளஷ்

ஃப்ளஷ் உங்கள் கன்னங்களை ஆப்பிள் போன்று அழகுபடுத்தப் பயன்படுகிறது. மேலும் கன்னங்கள் மென்மையாக இயற்கையான நிறத்தை கொடுக்க உதவுகிறது. இந்த ஃப்ளஷ்ஷை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் இளமையாக ஜொலிக்கலாம். நிறைய பேர்கள் இந்த ஃப்ளஷ்ஷை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் முகம் ஒரு இயற்கையான அழகை கொடுப்பதில்லை. நீங்கள் சரியான இடத்தில் ஃப்ளஷ்ஷை அப்ளை செய்யாவிட்டாலும் உங்களை வயதானவர் போல் காட்டும்.

அடர்ந்த நிற லிப்ஸ்டிக்

எல்லாரும் கண்டிப்பாக அடர்ந்த நிற லிப்ஸ்டிக்கை விரும்புவோம். அடர் சிகப்பு, அல்லது அடர்ந்த ஒயின் கலர், பெர்ரி நிறங்கள் அல்லது அடர்ந்த ஊதா நிறங்கள், அல்லது அடர்ந்த நீல நிறங்கள் போன்றவற்றை விரும்புவோம்.

ஆனால் சற்று வயதானவர்களுக்கு இந்த அடர்ந்த நிறங்கள் உங்கள் புன்னகைக் கோடுகளை மற்றவர்களுக்கு துடிப்பாக காட்டிக் கொடுக்கும். இதனால் இன்னும் கொஞ்சம் வயதான தோற்றம் உங்களிடம் தோன்றும். எனவே லேசான பிங்க் போன்ற நிறங்களை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு கொஞ்சம் வயதாக ஆரம்பித்ததும் உங்கள் உதடு சருமம் கேலோஜெனை இழந்து மெல்லியதாக மாறிவிடும். எனவே நீங்கள் அடர்ந்த நிறங்களை பயன்படுத்தும்போது உங்கள் உதடுகளை அவை மேலும் மெல்லியதாக காட்டும். இதுவே லேசான நிறங்கள் என்றால் உங்கள் உதடுகளை நன்றாக பெரிதுபடுத்திக் காட்டும்.அதிகமான பவுடரை பயன்படுத்துதல்

நீங்கள் அதிகமான பவுடரை பயன்படுத்தும் போது உங்கள் சருமம் வறண்டு போய் இன்னும் வயதானவர்கள் போல் காட்சி அளிப்பீர்கள். நிறைய வகையான பவுடர்கள் கிடைக்கின்றன. சிறிய கைக்கு அடக்கமான டப்பாக்களிலும் மற்றும் செட்டிங் பவுடர் போன்றவைகளாகவும் கிடைக்கின்றன.

எனவே நீங்கள் அதிகமான பவுடரை பயன்படுத்தும் போது உங்கள் கண்களுக்கு கீழே உள்ள பகுதி வறண்டு சரும சுருக்கங்கள் தெரிய ஆரம்பித்து விடும். எனவே லூஸ் பவுடர் அல்லது மஞ்சள் நிற லேசான பவுடர்களைப் பயன்படுத்துங்கள். இவை உங்கள் கண்களுக்கு கீழே உள்ள கோடுகளை மறைத்து விடும். உங்களையும் இளமையாக காட்டும்.

அதிகமாக கண் மை பயன்படுத்துவது

அதிகமான அடர்ந்த கருப்பு நிற மை பயன்படுத்தும் போது அது உங்கள் கண்களை சோர்வாக்கி அசிங்கமாக காட்டும். நாம் செய்யும் மற்றொரு தவறு கீழ் இமைகளில் உள்ள உள்ளடுக்குகளில் மட்டும் கண் மையை அப்ளை செய்து விட்டு மேல் இமைகளில் அப்ளே செய்யாமல் விட்டு விடுவோம். இது உங்களுக்கு ஒரு வயதான தோற்றத்தை கொடுக்கும்.இதற்கு பதிலாக நீங்கள் ஐ லைனரை பயன்படுத்துங்கள். லிக்விடு ஐ மட்டும் ஐ லைனர் கொண்டு அப்ளை செய்யும் போது உங்கள் கண்களை அழகாக காட்டுவதோடு உங்களையும் இளமையாக காட்டும். மஸ்காராவை பயன்படுத்தி உங்கள் இமைகளை அடர்த்தியாக்கி காட்டுங்கள்.

இனிமேல் இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் வயதை குறைத்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker