உறவுகள்புதியவை

இன்னும் கமிட் ஆகவேயில்லன்னு ஃபீல் பண்றீங்களா? My Story

லவ் பண்றதெல்லாம் வேஸ்ட் அது நம்ம நேரத்த சாப்டும் . எப்டி தான் அதுல டைம் வேஸ்ட் பண்ண மனசு வருதோ. அதெல்லாம் சினிமால பாக்குறதுக்கு நல்லா தெரியலாம். ஆனா அது கிடையாது லைஃப்…. டீக்கடையில் அலுவலக நண்பனுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தவனுக்கு காதலென்றால் கசப்பு தான். அதற்கு அவனிடம் முன் கதைகள் எல்லாம் ஏதுமில்லை. பலரும் கேட்டுப்பார்த்தார்கள்.காதல் தோல்வி தான் என சிலர் முடிவும் செய்திருந்தார்கள் ஆனால் உண்மை அதுவாக இருக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவில்லை. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் அலுவலகத்தில் : பணியாற்றும் அலுவலகத்தில் சிங்கிள் என்று சொல்லி கெத்தாக திரிவான்.சில பெண்களிடத்தில் இருந்து விருப்ப விண்ணப்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம்கண்டு கொள்ளும் மனநிலையில் அவன் இருக்கவில்லை.



இவனுக்குனு யாரும் வராமவா போய்டுவாங்க நண்பர்களின் புகைச்சலுக்கு விடையாய் அலுவலகத்தில் புதிதாக நுழைந்தாள் கீதா. காதல் மட்டும் பிடிக்காது : கதையின் ஆரம்பத்தில் பார்த்த அந்த சிங்கிள் ஹீரோவுக்கு பக்கத்து சீட் தான். மச்சி உனக்கு தான் பொண்ணுங்கனாலே பிடிக்கதுல நான் இங்க உக்காந்துகிறேண்டா ஹெச்ஆர்ட்ட சொல்லி சீட் மாத்திக்கோடா என்றான் நண்பன் ஒருவன். பொண்ணுங்கள பிடிக்காதுன்னு நான் எங்க சொன்னேன்…. லவ் தான் பிடிக்காது.முறைத்து….. ஹோ அப்டி போகுதா கத இரு க்ரூப்ல போட்றேன் நடத்து டா நடத்து….. என்று எரிச்சலுடன் டேபிளில் இருந்த ஃபைலை ஓங்கி அடித்து விட்டுச் சென்றான். ஒரு மாற்றமும் இல்லை : நண்பர்கள் இவர்களை கண்காணிக்க ஆரம்பித்தார்கள். எங்கே செல்கிறார்கள்,என்ன செய்கிறார்கள், அலுவலகத்தில் கேஃபடேரியா வரும் நேரம், அலுவலகத்திற்கு வரும் நேரம், சாப்பிடும் நேரம்,போகும் நேரம் எல்லாமே கணக்கிடப்பட்டது. ம்ம்ஹூம்….. எந்த மாற்றமும் நிகழவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

கேட்க கூசும் : நம் கதாநாயகனுக்கு அவளிடம் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை போலும் அதனால் தான் இருவரும் பேசாமல் இருக்கிறார்கள் என்று நினைத்து நண்பர்கள் பல கட்டங்களாக முயற்சித்தார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அவர்களும் கலாய்த்து ஓட்ட…. ஹீரோவுக்கு கடுங்கோபம். கீதா முன்னாலேயே பேசிக்கொண்டிருந்த நண்பனை கேட்ககூசும் வார்த்தைகளால் திட்டி இடத்தை விட்டு நகர்ந்தான். மன்னித்து விடுங்கள் : அதிர்ச்சியில் ஒரு கணம் யாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை நிலைமையை யூகித்த கீதா…. கேஃப்டேரிய போகலாமா என்றாள் திட்டு வாங்கிய நண்பனிடம். தலையசைத்தான் இருவரும் நகர்ந்தார்கள். நடந்த விஷயங்களை சொல்ல வாயைத் திறக்க…. அதற்குள்ளாக நடப்பது எல்லாம் தெரியும்.

ஆனால் கண்டு கொள்ளாது இருந்தேன். அந்த சூழலில் உங்களை காப்பாற்ற நினைத்தே காபி சாப்பிட அழைத்தேன் என்றாள். சம்மந்தம் : சம்மந்தப்பட்டவங்க முடிவு எடுக்கட்டும் நம்ம எதுவுக்கு தேவையில்லாம அவங்க லைஃப்ல விளையாடிட்டு என்று அவள் சொன்ன வார்த்தைகள் தொண்டையில் இறங்கிய காபியைவிட சூடாக கொதித்தது. பேச்சு : அதற்கு பிறகு நண்பர்கள் இவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வில்லை. அலுவலக ரீதியாக பேச ஆரம்பித்து…. காது கூசும் வார்த்தையைச் சொன்ன சண்டையில் முழுமையடைந்து ஹீரோவும் கீதாவும் பேச ஆரம்பித்திருந்தார்கள். காதல் பிடிக்காதா என்று கீதா கேட்ட கேள்விக்கு அப்போது அவனால் நிலையான பதில் சொல்லமுடியவில்லை. பிடிக்கலன்னு சொல்லுடா : நண்பர்களிடத்தில் உறுதியாக பிடிக்காது என்று சொல்ல முடிகிறவனால் கீதாவிடம் ஏனோ அந்த பதிலை உச்சரிக்க கூட முடியவில்லை.




தயங்கினான். ஏன் அவ முன்னாடி என்னால சொல்ல முடியல என்ற கேள்வி அவனை நிலை கொள்ளாமல் யோசிக்க வைத்தது. அதற்கு பிறகு கீதாவைப் பார்ப்பதையே தவிர்த்தான். திடீர் மாற்றம் : கீதாவும் புரிந்து கொண்டு விலகியே இருந்தால். திடிரென்று கீதா அலுவலகத்திற்கு ஒரு வாரம் விடுமுறை. காரணமில்லாமல் விடுமுறை எடுக்கமாட்டாலே…. ஒரு நாள் விடுமுறை என்றால் கூட டீமில் சொல்லிவிட்டு ஃபாலோ அப் செய்து கொண்டேயிருப்பாள் ஆனால் இந்த முறை திடீரென்று…..அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும் கீதாவின் இந்த திடீர் விடுமுறை குறித்து விவரமேதும் தெரியவில்லை. கண்ணீர் : ஒருவாரம் கழித்து வந்தாள். முகத்தில் சோகம் தெரிந்தது. ஆனால் அதை மிகவும் கஷ்டப்பட்டு மறைக்க முயற்சிக்கிறாள் என்பது புரிந்தது. விசாரிப்பவர்களிடத்தில் வலிய வரும் சிரிப்பை முன் வைத்து ஊருக்குச் சென்றேன் திடீரென்று விஷேசம் என்று சொன்னாள் அவனுக்கு மட்டும் இது பொய் என்று அப்பட்டமாக தெரிந்தது. என்ன காரணம் : இரண்டு நாட்கள் கவனித்தான். அதற்கு மேல் மனம் கேட்கவில்லை. கீதா…. நீங்கதானா பேசுறது? என்ன திடீர்னு என்று கேட்டாள். என்னாச்சு? என்ன என்னாச்சு….. ஒண்ணுமே ஆகலையே… இப்போது தான் லன்ச் முடிஞ்சது சமாளிக்காத கீதா. மௌனமாய் இருந்தள் ஏதோ ப்ராப்ளம் உன் முகத்த பாத்தாவே தெரியுது.

ஏன் மறைக்கிற ஏன் ஊர்ல விஷேசம்னு பொய் சொல்ற…நீ சொன்னாதான எங்களால எதாவது ஹெல்ப் பண்ண முடியும். கண்ணீர் : அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு நின்றது. அதை மறைக்க சிரித்தாள். சமாளித்தாள். என்ன சொன்னீங்க? ஏன் இப்போ அழற…. நீ சொன்னதான நாங்க ஹெல்ப் பண்ண முடியும்ன்னு சொன்னேன் இதுல என்ன தப்பு…. உனக்கு வெளிய சொல்ல இஷ்டமில்லன்னா வேண்டாம். அதுக்காக எல்லாம் அழாத…. சாரி என்றான். இப்போ புரிஞ்சதா : இதத்தான் நானும் சொல்றேன் காதல் பிடிக்காததுக்கு காரணத்த வெளிய சொன்னாதான நாங்க ஹெல்ப் பண்ணமுடியும் என்று சிரித்தாள்.




ஆமா… எனக்கு ப்ராப்ளம் வெளிய சொல்ல பிடிக்காம ஊருக்கு போய்ட்டேன்னு பொய் சொன்னேன். எல்லாரும் நம்பினாங்க…. ஆனா நீங்க தான் இப்டி கேக்குறீங்க. சொல்லாமலே என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சுக்கிறதத்தான் நான் காதல்னு நினைக்கிறேன்.

Related Articles

21 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker