தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கர்ப்ப காலத்தில் உண்டாகும் கால் வலிக்கு தீர்வு தான் என்ன?

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களானது சற்று சிரமமாக இருக்கும். இந்த மூன்று மாதங்களில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க சத்தான உணவுகளை சாப்பிடாலே போதுமானது…

தன் பின்னர் எப்படி அமர வேண்டும், எந்த நிலையில் படுத்து தூங்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.. இந்த பகுதியில் கர்ப்ப காலத்தில் வரும் சில பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

புரத சத்து:

முதல் மூன்று மாதங்களில் புரத சத்து அடங்கிய உணவை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் குழந்தை வலுவுடன் கருவில் வளர தொடங்குகிறான். பீன்ஸில் இந்த புரத சத்து தேவையான அளவு இருக்கிறது. மேலும், மெல்லிசான இறைச்சி, கோழி, மீன், முட்டை, பால், பாலாடைக்கட்டி, தயிர், முதலியவற்றிலும் புரத சத்து காணப்படுகிறது.

கால்சியம் சத்து:

முதல் மூன்று மாதங்களில் உங்களுக்கு கால்சியம் சத்து என்பது தேவைப்படுகிறது. இதனால், பிறக்கும் உங்கள் குழந்தையின் செல்லக் கடி, சுகமாக இருக்க, அவன் எலும்பும் வலுவானதாய் இருக்கிறது. பாலினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் இந்த கால்சியம் சத்து மிகுதியாக இருக்கிறது. மேலும், செறிவூட்டப்பட்ட தானியம், ஜூஸ், சோயா, பிரெட் முதலியவற்றிலும் கால்சியம் சத்து இருக்கிறது. செறிவூட்டப்பட்ட உணவை வாங்கும்போது தரம் பார்த்து, டாக்டரிடம் பரிந்துரை செய்து வாங்க வேண்டியது அவசியமாகும்.

பசலைக்கீரை:

இந்த கீரை கிராமத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. எல்லோர் வீட்டிலும் கொல்லைப்புறத்தில் வளர்ந்து கிடக்கும் ஒரு கீரையும் கூட. இந்த கீரையை குழம்பு வைத்து சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது. முருங்கை கீரை குழம்பு போன்றே இதன் சுவையும் நன்றாக இருக்கும். இந்த கீரையை முதல் மூன்று மாதங்களில் சேர்த்து கொள்வதனால், உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இரத்த ஓட்டம் பெருகுகிறது. இதில் பெருமளவில் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.

ஆரஞ்சு பழம்:

கர்ப்பிணி பெண்கள், ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால்… அதில் இருக்கும் வைட்டமின் சி குழந்தை பிறக்கும்போது உண்டாகும் சிக்கலை தவிர்க்க உதவுகிறது. மேலும், இதனால் தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான எதிர்ப்பு சக்தியையும் சேர்த்து தருகிறது.

முட்டை:

இதில் புரத சத்து இருக்கிறது என்பதை ஒவ்வொரு வருட பாடப்புத்தகத்திலும் நாம் படித்து தெரிந்துக்கொண்டது தான். அப்படி இருக்க நான் சொல்லி வேற தெரிய வேண்டுமா என்ன? கர்ப்பிணிகள், தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நன்மையை தரக்கூடும்.

பயிற்சி

காலை நீட்டி தரையில் அமர்வதால் இடுப்புக்கு பயிற்சி மற்றும் கால்வீக்கம் ஏற்படாது. கீழே அமர்ந்து எழும்போது தொடை மற்றும் கணுக்காலில் உள்ள தசைகள் வலுவடையும். இரண்டு கால் பாதங்களும் ஒன்றாக சேரும்படி தரையில் ஐந்து நிமிடங்கள் அமர வேண்டும். இது தொடை மற்றும் இடுப்பு தசைகளை வலுவடையச்செய்யும். இறுதியாக ஒன்று எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே மேற்கொள்ள வேண்டும்.

கால் வலி

கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் அதனால் மூட்டு, முதுகு, கணுக்காலில் வலி ஏற்படும். அதை தடுக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். அப்போது தான் இடுப்பு எலும்பு மற்றும் உடல் தசைகள் வலுவடையும். இப்போது கர்ப்பகாலத்தில் சர்க்கரைநோய் வருவது சகஜமாகிவிட்டது. அவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உட்காரும் போது சேரில் அமராமல் தரையில் உட்கார வேண்டும்.

நார்ச்சத்து உணவுகள்

படுக்கும் போது காலை உயர்த்தி வைத்து படுக்கலாம். இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவை சாப்பிடவேண்டும். ரசம் சாதம், பால் சாதம் சாப்பிடலாம். பிறகு படுக்கும் முன் ஒரு தம்ளர் பால் அல்லது பழம் சாப்பிட்டு விட்டு படுக்கலாம். பொதுவாக கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது இயல்பு என்பதால் தினமும் ஒரு பழம் மற்றும் நார்சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. எனவே தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடலாம். தவிர எல்லா வகையான காய் மற்றும் பழங்களையும் சாப்பிடவேண்டும். புரதசத்துக்கு பாதாம், பிஸ்தா, அக்ரூட், வேர்க்கடலை, மீன், முட்டை, சாப்பிடலாம். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.

Related Articles

54 Comments

  1. Appreciation for taking the time to discuss this topic, I would love to discover
    more on this topic. If viable, as you gain expertise, would you object to updating
    the website with further information?“밤의전쟁” It is tremendously beneficial for me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker