ஆரோக்கியம்

இத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா?

அன்றாடம் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் மேற்கொள்ளும் சில செயல்களால், நமக்கு தெரியாமலேயே உடலினுள் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் சேர்கிறது என்று தெரியுமா? குறிப்பாக நாம் குடிக்கும் நீர், டூத் பேஸ்ட் மற்றும் உணவுகளில் சேர்க்கப்படும் மிகவும் மோசமான சோடியம் ஃப்ளூரைடு, நம் பற்களை சொத்தை செய்வதோடு மட்டுமல்லாமல், நாம் நினைப்பதை விட மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பது தெரியுமா? சோடியம் ஃப்ளூரைடு ஒரு நியூரோடாக்ஸின். இந்த நச்சுப் பொருள் நரம்பு திசுக்களை சேதப்படுத்தும். இந்த நச்சுப் பொருளின் வகையைச் சேர்ந்தது தான் ஆர்சனிக், ஈயம் மற்றும் பாதரசம் போன்றவை. பல்வேறு ஆய்வுகளுக்கு பின்பு தான், சோடியம் ஃப்ளூரைடு நச்சுமிக்கதாக நிரூபிக்கப்பட்டது. இது தெரியாமல் நாம் அனைவரும் அன்றாடம் இந்த நச்சு நிறைந்த பொருட்களை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.

சோடியம் ஃப்ளூரைடு நிறைந்த பொருட்களை தொடர்ச்சியாக உட்கொள்ள, அது எலும்புகளின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, அறிவாற்றல் குறைவு, பற்களின் மேல் ஒரு படலத்தை உருவாக்கி பற்களின் ஆரோக்கியம் பாழாகும் என பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வில் ப்ளூரைடு நிறைந்த நீரைக் குடிப்பதை நிறுத்திய குழந்தைகளுக்கு, பல் சொத்தை ஏற்படும் அபாயம் குறைந்திருப்பது தெரிய வந்தது.

குழாய் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். நீரை காய்ச்சி வடிகட்டி குடியுங்கள். * கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பொருட்களின் பின்புறம் குறிப்பிடப்பட்டுள்ள லேபிளை கவனமாக படியுங்கள். * உடலை சுத்தம் செய்யும் உணவுப் பொருட்களை அடிக்கடி உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கீழே உடலில் இருந்து சோடியம் ப்ளூரைடை நீக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அயோடின் போதுமான அளவிலான அயோடின் தைராய்டு ஹார்மோன்களின் சீரான பராமரிப்பிற்கு மிகவும் அவசியமானவை. இந்த சோடியம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள ப்ளூரைடை சிறுநீரின் வழியே வெளியேற்ற உதவும். இத்தகைய சோடியமானது கிரான்பெர்ரி பழங்கள், தயிர், உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் வளமான அளவில் நிறைந்துள்ளது.

போரான் போரான் ஒரு இயற்கை கனிமப் பொருள். இது உடலில் இருந்து நச்சுமிக்க சோடியம் ப்ளுரைடை வெளியேற்ற உதவும். இந்த போரான் அல்லது போராக்ஸ் கொண்டைக்கடலை, நட்ஸ், பேரிச்சம்பழம், தேன், ப்ராக்கோலி, வாழைப்பழம் மற்றும் அவகேடோ போன்றவற்றில் ஏராளமான அளவில் உள்ளது. வேண்டுமானால், 1/4 டீஸ்பூன் போராக்ஸ் பவுடரை 1 லிட்டர் நீரில் சேர்த்து கலந்து, நாள் முழுவதும் குடியுங்கள். புளி புளி கொண்டு தயாரிக்கப்படும் பானி பூரி நீர் மிகவும் நல்லது என்பது தெரியுமா? இந்த ஆயுர்வேத மூலிகைப் பொருள் உடலில் இருந்து ப்ளூரைடை வெளியேற்ற உதவும். புளி நீர் உடலில் இருந்து சோடியம் ப்ளூரைடை சிறுநீரின் வழியே வெளியேற்றும். எனவே புளியை உங்களுக்கு பிடித்த வடிவில் உட்கொள்ளுங்கள். கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் உடலிலேயே கல்லீரல் மிகவும் பெரிய உறுப்பு. இது உடலில் இருந்து டாக்ஸின்களை வடிகட்டி வெளியேற்றும் பணியை செய்கிறது. இப்படி உடலில் முக்கிய பணியான வடிகட்டும் செயலை செய்யும் கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு பூண்டு, மஞ்சள், எலுமிச்சை போன்ற உணவுகளை அன்றாட உணவில் தவறாமல் சேர்க்க வேண்டும். இதனால் சோடியம் ப்ளூரைடால் கல்லீரல் சேதமடைவதைத் தடுக்கலாம். வைட்டமின் சி வைட்டமின் சி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும்.

எனவே இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, தக்காளி போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள். இதன் விளைவாக உடலில் தேங்கியுள்ள நச்சுமிக்க சோடியம் ஃப்ளூரைடை வெளியேற்றலாம். மக்னீசியம் மக்னீசியம் மிகவும் முக்கியமான கனிமச்சத்தாகும். இது உடலில் இருந்து சோடியம் ஃப்ளூரைடை வெளியேற்ற உதவும். மேலும் இச்சத்து உடலில் உள்ள செல்கள் ப்ளூரைடை உறிஞ்சுவதைத் தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களில் படிவதைத் தடுக்கும். இத்தகைய மக்னீசியம் பச்சை இலைக் காய்கறிகள், மீன், பீன்ஸ் போன்றவற்றில் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளுங்கள். நீராவி அறை வியர்வையின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றுவது என்பது மிகச்சிறந்த வழி. அதற்கு வியர்வையை வரவழைக்கும் செயலான சவுனா என்னும் நீராவி அறையில் இருப்பது சிறந்த வழி. கட்டாயம் நம்மில் பலரால் அழகு நிலையங்களுக்குச் சென்று பணம் செலவழித்து சவுனா முறையை மேற்கொள்ள முடியாது. ஆனால் நம் வீட்டில் உள்ள குளியலறையில் ஜன்னல் கதவுகள் அனைத்தையும் மூடி, சுடுநீர் குழாயை திறந்துவிட்டு, 10-15 நிமிடம் இருங்கள். முக்கியமாக இச்செயலுக்கு முன்பும், பின்பும் அதிக நீரை தவறாமல் குடியுங்கள். ப்ளூரைடு டூத் பேஸ்ட்டை தவிர்க்கவும் ப்ளூரைடை உடலில் நுழைய விடாமல் தடுப்பதற்கு ப்ளூரைடு நிறைந்த டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்குவதைத் தவிர்க்க வேண்டும். என்ன தான் சிறிய அளவிலான டூத் பேஸ்ட்டை தினமும் பயன்படுத்தினாலும், அதனாலும் சோடியம் ப்ளூரைடு இரத்த நாளங்களில் நுழைந்து தீங்கு விளைவிக்க ஆரம்பிக்கும். ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்பும் பற்களைத் துலக்கினால், பற்கள் சொத்தையாவதைத் தடுக்கலாம். ஆனால் அதற்காக ப்ளூரைடு நிறைந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தினால்,

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே நேச்சுரல் டூத் பேஸ்ட்டான தேங்காய் எண்ணெய் அல்லது உப்பு கொண்டு பற்களைத் துலக்குங்கள். இதனால் பாக்டீரியாக்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கலாம். கடற்பாசி கடற்பாசியில் வளமான அளவில் அயோடின் நிறைந்துள்ளது. இந்த கடற்பாசியானது மாத்திரை வடிவிலும், கேப்ஸ்யூஸ் வடிவிலும், பொடி வடிவிலும் கடைகளில் கிடைக்கும். இதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடலில் சோடியம் ஃப்ளூரைடால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம். குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து கிடைக்கும் கடற்பாசியே மிகச்சிறந்தது. ஏனெனில் பசிபிக் பெருங்கலில் ஃபூகுஷீமா கதிர்வீச்சு கசிவதால், இவ்விடத்தில் இருந்து கிடைக்கும் கடற்பாசி சிறந்தது இல்லை. குறிப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளதை மனதில் கொண்டு, சேர்க்க வேண்டியதை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் சோடியம் ப்ளூரைடு வெளியேறி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் தினமும் உடற்பயிற்சியையும் செய்யுங்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து, எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள். அதோடு, நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியும் உடலுக்கு கிடைக்கும்.

Related Articles

18 Comments

  1. Excellent post. I was checking constantly this
    Extremely useful information specially the last part
    care for such info much. I was seeking this particular information for a very long
    time. Thank you

  2. obviously like your web-site but you have to check
    the spelling on several of your posts. Many of them are rife with spelling issues and I
    in finding it very troublesome to tell the reality
    then again I will definitely come again again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker