புதியவைமருத்துவம்

சிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்

மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும்.

தேவையான பொருட்கள்

  • மணத்தக்காளி கீரை- 1 கப்
  • மணத்தக்காளி விதை- 2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்-6
  • தக்காளி – 1
  • பூண்டு- 1
  • தேங்காய் பால் – 1 கப்

மணத்தக்காளி கீரை

செய்முறை :

மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், இடித்து வைத்த பூண்டு போட்டு வதக்கவும்.

பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அனைத்து லேசாக வதக்கினால் போதும். வதங்கியதும் தேங்காய்பால் சேர்த்து கொதி வந்ததும் விதை, கீரையை சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு போதுமான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக சாப்பிடலாம்.

சூடான சத்தான மணத்தக்காளி கீரை சூப் ரெடி.

more details click here !!!

Related Articles

Close