ஆரோக்கியம்மருத்துவம்

வெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால்…

வெள்ளைப்படுதல் மாதவிலக்கிற்கு சில நாட்களுக்கு முன் வரும். இதனால் பிரச்சனையில்லை. நமது கர்ப்பப்பையில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்களை கர்ப்பப்பையே வெஜைனா மூலம் வெளியேற்றும். இது சாதாரணமானது தான்.

ஆனால் வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் கிருமித்தொற்று அதிகமாக இருக்கும் என்று அர்த்தம். இதனை உடனேயே சரிப்படுத்திவிடலாம்.

ஆனால் வெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உடனடியாக மருத்துவரை நாடவும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

மாதவிலக்கு பின்பு….

மாதவிலக்கு முடியும் நேரத்தில் வந்தால் அது இறந்த ரத்த செல்கள் கலந்து பழுப்பு நிறமாக வெள்ளைப்படுதல் வெளிப்படும்.

மாதவிலக்கு முன்பு…

மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு முன் உண்டானால் உங்கள் உடலில் பொரோஜஸ்டிரான் அளவு குறைவாக இருக்கிறது என அர்த்தம்.

இடையில் வந்தால்…

மாதவிலக்கிற்கு இடைப்பட்ட நாட்களில் வந்தால் உண்டாகியிருக்கலாம் அல்லது ஹார்மோன் பிரச்சனையாக இருக்கலாம்.

Show More

Related Articles

Close