சமையல் குறிப்புகள்புதியவை

பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

கொழுக்கட்டை மாவு – 1 கப்

வெல்லம் பொடித்தது – 1/2 கப்
பால் – 1 கப்
தேங்காய்த்துருவல் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை :

ஒரு வெறும் வாணலியில் கொழுக்கட்டை மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.

2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அதை கொழுக்கட்டை மாவில் ஊற்றி, ஒரு கரண்டியால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.


பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.

அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் செய்து வைத்த உருண்டைகளை போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும்.

பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.

சூப்பரான பால் கொழுக்கட்டை ரெடி.

இதை சூடாக வாழை இலையில் ஊற்றி சாப்பிடுவதே தனிச்சுவைதான்.


குறிப்பு: வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்து செய்யலாம்.

Related Articles

Close