ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

பல் கூச்சத்தால் அவதியா? இதனை தடுக்க என்ன செய்யலாம்?

பல் கூச்சம் என்பது பெரிய பிரச்னையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்வின் இயல்பை முற்றிலுமாக பாதிக்கும். இயல்பாக பேச முடியாது. வாயில் காற்று நுழைந்தால் கூட அசௌகர்யம் ஏற்படும்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணம் பல்லின் எனாமல் தேய்வதுதான். சிலருக்கு பாதிப்பல் உடைந்திருக்கும் பட்சத்தில் கூச்சம் ஏற்படும்.

இதுதவிர சிலருக்கு பல்லின் வேர் தெரியத் தொடங்கும். அதாவது ஈறுகள் இறக்கம் அடைந்து பல்லின் வேர் தெரியும் போது பல் கூச்சம் ஏற்படலாம்.

இதனை மருந்துகள் கொண்டு சரி செய்வதை விட ஆரம்பத்திலே ஒரு சில இயற்கை பொருட்களை கொண்டு கூட சரி செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது பல்கூச்சத்திலிருந்து விடுபட உதவும் ஒரு சில வழிகளை இங்கு பார்ப்போம்.

  • பல் கூச்சம் இருக்கும் போது தேங்காயெண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வாயில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாய்க்குள் வைத்து பற்கள் முழுவதும் படும்படி சுழற்றி பிறகு வெளியே துப்பவும். தினமும் காலை வேளையில் இதை செய்து வரலாம்.
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வாயில் ஊற்றி கொப்புளிக்க வேண்டும். தினமும் இரண்டுமுறை இதை செய்து வந்தால் கூச்ச உணர்வு குறையக்கூடும்.
  • 1 பல் பூண்டை இடித்து உப்பு 1 சிட்டிகை தூவி இலேசாக நீர் தெளித்து பல் கூச்சம் இருக்கும் இடத்தில் தடவி விடவும். பிறகு 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு மந்தமான நீரில் வாய் கொப்புளியுங்கள். தினமும் இதை செய்து வரலாம்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி பாதிக்க்கப்பட்ட இடத்தில் படும்படி மென்று சாப்ப்பிட வேண்டும். அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் வெங்காயத்தை தடவி சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு 10 நிமிடங்கள் கழித்து வெளியே துப்பி விட வேண்டும்.
  • கிராம்பு எண்ணெய் மணம் கொண்டது. இதை தனித்து பயன்படுத்தாமல் வேறு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 6 துளி கிராம்பு எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம். இதை அப்படியே வாயில் ஊற்றி பயன்படுத்தாமல் பல் கூச்சம் இருக்கும் இடங்களில், ஈறுகளில் தடவி கழுவி விடவும். தினமும் இரண்டு முறை இதை செய்து வந்தால் கூச்சல் உணர்வு குறையும்.
  • கொய்யா இலைகளை சுத்தம் செய்து 2 அல்லது 3 மட்டும் எடுத்து நறுக்கி பற்களில் படும்படி நன்றாக மென்று பின்னர் வெளியே துப்பவும். தினமும் இரண்டு முதல் மூன்று முறை வரை இதை செய்யலாம். பல் கூச்சம் குறையும் வரை இதை செய்யலாம்.
  • பல் கூச்சும் திறனை சந்திப்பவர்கள் தினம் அரை கப் அளவு தயிர் சேர்ப்பதன் மூலம் இந்த பல் கூச்சும் திறன் குறைவதை பார்க்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker