அழகு..அழகு..புதியவை

பின்னலும் கொண்டையும்

பின்னப்பட்ட கொண்டை மற்றவரை எளிதில் கவர்ந்துவிடும். இதனை ஸ்டைல், ஃபேஷன் ஸ்டேட்மென்ட் என்றும் சொல்லலாம். இதை சுலபமாக கற்றுக்கொள்ள எளிய செய்முறைகளை இங்கே பாருங்கள்.

  • முதலில் கூந்தலில் உள்ள சிக்கை நீக்கவும். கூந்தலில் பிரிவுகளை செய்து கொள்ளவும். தலையின் முன்பகுதியில் இருக்கும் கூந்தலை தனியாக பின் செய்யவும்.
  • கூந்தலில் ஹேர்ஸ்பிரே பயன்படுத்தவும். இதனால் இந்த ஸ்டைலை செய்வது சுலபமாக இருக்கும்.
  • ஒவ்வொரு கூந்தல் பகுதியிலும் டாங்கை பயன்படுத்தி சுருள்களை உருவாக்கவும்.
    பின்களைக் கொண்டு சுருள்களை செட் செய்து கொள்ளவும்.
  • சுருள்களை செய்து முடித்தவுடன், விரல்களால் சுருள்களை பிரித்து விடவும்.
  • ஹேர் கிளிப்பை பயன்படுத்தி சுருள்களை முடிந்துகொள்ளவும்.
  • முன்பகுதியில் கலைந்த கூந்தலில் ஃப்ரென்ச் பின்னலை உருவாக்கவும்.
  • பின்னலை ரப்பர் பேண்டால் இறுக்கவும். கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்க, பின்னலை விரித்துவிடவும்.
  • இதற்கு பின்னால் இருக்கும் கூந்தலிலும் இதே போன்ற ஃப்ரென்ச் பின்னலை போடவும்.
    டாங் செய்த முடியிலிருந்து பின்களை நீக்கவும். கூந்தலின் உச்சியில் ‘பஃபை’ போட்டு, பின்களால் பிணைக்கவும்.
  • மீதமுள்ள கூந்தலில் சாதாரண பின்னலை போட்டுக் கொள்ளவும்.
  • இந்த மூன்று பிரிவையும் சேர்த்து ஒரு பின்னலை போட்டுக் கொள்ளவும். பேண்டைப் பயன்படுத்தி முடிக்கவும்.
  • இந்தப் பின்னலை, இறுதியாக ஒரு கொண்டையாக போட்டுக்கொள்ளவும். ஃபினிஷிங் ஸ்பிரேவைக் கொண்டு முடிக்கவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker