சமையல் குறிப்புகள்புதியவை

மாட்டு இறைச்சியில் அருமையான சமோசா செய்யலாம்

பல்வேறு வெரைட்டியில் சமோசா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாட்டு இறைச்சியில் சூப்பரான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

மாட்டு இறைச்சியில் அருமையான சமோசா செய்யலாம்

தேவையான பொருட்கள்:

மாட்டு இறைச்சி – அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)

  • உருளைக்கிழங்கு – 4
  • பச்சை மிளகாய் – 3
  • பெரிய வெங்காயம் – 2
  • கறிமசாலா – 1 தேக்கரண்டி
  • மல்லிப்பொடி – 1 தேக்கரண்டி
  • மிளகாய் பொடி – தேவையான அளவு
  • சீரகம், பெருஞ்சீரகம் பொடி – தலா 1 தேக்கரண்டி
  • ஏலக்காய்- 2
  • கருவாப்பட்டை- 2
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • சமையல் எண்ணெய் – பொரிக்கவும், தாளிக்கவும்

சமோசா செய்ய:

மைதா மாவு – 3 தேக்கரண்டி
சமோசா பட்டி (wrap) (கடைகளில் கிடைக்கும், கிடைக்காதவர்கள் தனியாக மைதா மாவு வைத்துக் கொள்ளவும்)

மாட்டு இறைச்சியில் அருமையான சமோசா செய்யலாம்

செய்முறை:

மாட்டு கறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.சுத்தம் செய்த கறியை சிறிது உப்பு, மஞ்சள் இட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.உருளை கிழங்கை கழுவி விட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.

மூன்று தேக்கரண்டி மாவை தனியாக அளவாக நீர் விட்டு தோசை மாவு பக்குவத்திற்கு கலக்கி தனியாக வைத்திருக்கவும்(சமோசா உறையை நாமாக செய்தால் இது தேவையில்லை)

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் ஏலக்காய், கருவாப்பட்டை போட்டு அது பொரிந்ததும் இறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும்.அதோடு இஞ்சி பூண்டு அரைத்ததை போட்டு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்

இதனுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.அத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா மல்லி பொடி, மிளகாய் பொடி, தேவையான அளவு போட்டு கிளறி விடவும்.

கடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்.சமோசா பட்டி கிடைக்காதவர்கள், மைதாமாவில் சிறிது வெந்நீர், தேவையான உப்பு, சீரகம் போட்டு சப்பாத்தி மாவு போல நன்கு பிசையவும்.

பின்பு மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து வைக்கவும். இவற்றை சப்பாத்தி போல உருட்டி எடுத்து அவற்றை கத்தி மூலம் இரு பாகமாக வெட்டி வைத்துக் கொள்ளலாம்.

சமோசா உறையில் தேவையான அளவு இறைச்சி கலவையை ஒரு மூலையில் வைத்து முக்கோணமாய் சுற்றவும்.சுற்றி முடிந்ததும் கடைசியில் சமோசாவின் மூலைகளை கரைத்த மாவால் ஒட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

சமோசா பட்டியை நாமாக செய்திருந்தால் அதே மாவிலேயே ஒட்டி விடலாம்.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்த வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான மாட்டு இறைச்சி சமோசா ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker