உலக நடப்புகள்புதியவை

நம் விரல்கள் நம்மைப் பற்றி என்ன ரகசியங்களைக் கொண்டுள்ளது என்று தெரியுமா?

நம் விரல்கள் நம்மைப் பற்றி என்ன ரகசியங்களைக் கொண்டுள்ளது என்று தெரியுமா?

நம் கையில் உள்ள ஒவ்வொரு விரலும் நம் ஆளுமையைப் பற்றி ஏதோ ஒன்றை சொல்லும். நம் கையில் உள்ள ஒவ்வொரு விரலைப் பற்றிய விரிவான ஆய்வு என்பது ஒரு அறிவியல் ஓடையாக உள்ளது என கைரேகை நிபுணர்கள் நம்புகின்றனர்.

இருந்தாலும் நம் ஆளுமையை பற்றி நம் விரல் ஒவ்வொன்றும் எந்தளவிற்கு வெளிப்படுத்துகிறது என்பதைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது நல்லது. சரி இப்போது நம் விரல்கள் நம்மைப் பற்றி என்ன ரகசியங்களைக் கொண்டுள்ளது என்று பார்ப்போம்.
கையில் இருக்கும் பெருவிரலின் முக்கியத்துவம்
கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை பெருவிரல் வகிக்கிறது. அதேப்போல் நம் மூளையிலும் கூட அது மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது. கட்டை விரல் எனப்படும் பெருவிரல் இல்லாமல் நம் ஆளுமை முழுமையடையாது. பெருவிரல் என்பது ஒரு நபரில் இருக்கும் மன உறுதி மற்றும் சுய கட்டுப்பாட்டை குறிக்கும்.
நீண்ட மற்றும் கட்டையான பெருவிரல்
தன் கையில் உள்ள மற்ற விரல்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நபரின் பெருவிரல் நீளமாக இருந்தால், தன்னை சுற்றியுள்ள வளிமண்டலம் மற்றும் சுற்றுச்சூழலை தன் கட்டுப்பாட்டில் அவர் வைத்திருப்பார் என கூறப்படுகிறது. அனைத்தையும் தங்கள் பொறுப்பில் எடுத்து, அதனை வழி நடத்தி செல்வார்கள். மாற்றாக, ஒருவரின் பெருவிரல் கட்டையாக இருந்தால், அவர்களின் செயல்களையும், எதிர்வினைகளையும் சுற்றுச்சூழல் கட்டுப்படுத்தும். அதனால் அவர்கள் எந்த பொறுப்பையும் எடுக்கமாட்டார்கள்; சீக்கிரமாக மூழ்கடிக்கப்படுவார்கள். நம் விரல்களின் அளவு நம் ஆளுமையைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பற்றி பார்க்கலாமா?
பெருவிரல்
நம் கைகளில் உள்ள இரண்டு பெருவிரல்களும் நம் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிப்பதோடு, குறிப்பிட்ட ஒரு பங்கையும் வகிக்கிறது. பெருவிரல் என்பது உள்ளங்கைக்கு மிக அருகில் உள்ளது. தர்க்கரீதியாக சிந்திக்கும் தனிப்பட்ட திறனை அது குறிக்கிறது. அது நம் மன உறுதியையும் குறிக்கும். அதன் அளவில் உள்ள வேறுபாடுகள், எப்படி ஒருவர் சுற்றுச்சூழல் மற்றும் முடிவெடுக்கும் திறனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை தீர்மானிக்கும்.
ஆள்காட்டி விரல்
ஆள்காட்டி விரலை வியாழன் விரல் என்றும் அழைப்பர். ஒருவரின் குறிக்கோள் மற்றும் வழிகாட்டலை இது குறிக்கும். நம் வாழ்க்கை எத்திசையை நோக்கி செல்லும் என்பதையும், நோக்க உணர்வையும் இது குறிக்கும். ஆள்காட்டி விரல் கட்டையாக இருந்தால் தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடிக்க அவர்களால் முடியாமல் போகும். அத்தகைய தனிப்பட்ட நபர்களுக்கு சமூக அமைப்புகளோடு ஒன்றிட கடினமாக இருக்கும். மாறாக, ஒருவரின் ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால், அவர் மிகவும் நற்குணமுள்ளவராக இருப்பார். அதே போல் சமுதாயத்திலும் முக்கியமானவராக இருப்பார்.
சனி அல்லது நடு விரல்
நடு விரலை சனி விரல் என்றும் அழைப்பர். மற்ற நான்கு விரல்களை விட இது தான் புத்திசாலியான விரலாகும். நம் திறன்களை இவ்விரல் தான் கேள்வி கேட்கும். அதேப்போல் நம் முடிவுகளை பற்றி மீண்டும் ஆலோசிக்க வைக்கும். உள்ளங்கையின் அகலத்தை விட நம் நடு விரல் கட்டையாக இருந்தால், விரைவாக புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருக்கும். உணர்வற்றவர்களாக உள்ள இவர்கள் தவறான விஷயங்களை தான் பொதுவாக செய்து விடுவார்கள். மாறாக, நடு விரல் நீளமாக இருக்கும் நபர்கள் தன்னிச்சையாக செயல்பட மாட்டார்கள். அதே போல் மிகவும் கடுமையானவர்களாக இருப்பார்கள்.
சூரிய விரல் அல்லது மோதிர விரல்
மோதிர விரலை சூரிய விரல் என்றும் கூறுவார். கூட்டத்திற்கு மத்தியில் தனியாக தெரிய உதவும் கலகலப்பான குணத்தை இந்த விரல் குறிக்கும். தைரியம், கவர்ச்சி மற்றும் பேரார்வத்தை இது குறிக்கும். இவ்விரல் கட்டையாக இருந்தால், அந்த நபர் தைரியமற்றவராக, பேரார்வமற்றவராக, எந்த ஒரு சுற்றுச்சூழலிலும் பாதுகாப்பின்மையோடு உணர்வார்கள். இவர்கள் இயற்கையாகவே சாதுவானவர்களாக இருப்பார்கள். மோதிர விரல் நீளமாக இருந்தால், அந்த நபர் கவனத்தை கோருபவராக இருப்பார். அதேப்போல் மற்றவர்களை வசீகரிக்கும் வகையில் செயல்படுவார்கள்.
சுண்டு விரல் அல்லது புதன் விரல்
சுண்டு விரல் அல்லது புதன் விரலை, பிங்கி என்றும் அழைப்பார்கள். இவ்விரல் தனிப்பட்ட தொடர்பாற்றல்களையும், பாலியல் ரீதியான உணர்ச்சி வெளிப்பாட்டையும் குறிக்கும். சுண்டு விரல் மிகவும் சிறியதாக இருந்தால், அந்த நபர் புத்தி கெட்டவராக அல்லது அப்பாவியாக இருப்பார். அதேப்போல் தங்களின் சுற்றுச்சூழலின் மீதோ அல்லது அதனை புரிந்து கொள்ளவோ விருப்பம் காட்ட மாட்டார்கள். சுண்டு விரல் நீளமாக இருந்தால், அந்த நபர் சிறந்த தொடர்பாற்றலை கொண்டிருப்பார். ஆனால் அதிகமாக மிகைப்படுத்தி, பொய் சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker