சமையல் குறிப்புகள்புதியவை

சுவையான… பட்டர்ஸ்காட்ச் புட்டிங்

தேவையான பொருட்கள்:

* பால் – 1 1/2 கப்

* கடல் பாசி – 5 கிராம்

* தண்ணீர் – 1/2 கப்

* நாட்டுச் சர்க்கரை – 1/2 கப்

* பட்டர்ஸ்காட்ச் சிப்ஸ் – 1/4 கப்

* பட்டர்ஸ்காட்ச் எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் அதை வடிகட்டிவிட்டு, அந்த பாலை 3-5 நிமிடம் கொதிக்க விட்டு, ஓரளவு கெட்டியாகும் போது இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதில் பட்டர்ஸ்காட்ச் எசன்ஸ் ஊற்றி நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* இப்போது கடல் பாசியை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து கடல் பாசியைக் கரைக்க வேண்டும்.

* கடல் பாசி முழுவதும் உருகியதும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பின் பிளெண்டரில் பட்டர்ஸ்காட்ச் சிப்ஸ் போட்டு அரைத்து, அதை கொதிக்க வைத்துள்ள பாலுடன் சேர்த்து, அத்துடன் கடல் பாசியையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* இப்போது ஒரு ட்ரேயை எடுத்து, அதில் தயாரித்து வைத்துள்ள புட்டிங் கலவையை ஊற்றி நன்கு பரப்பி, ஒரு அலுமினியத் தாள் கொண்டு மூடி, ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் திறந்தால் சுவையான பட்டர்ஸ்காட்ச் புட்டிங் தயார்.

Related Articles

Close