ஆரோக்கியம்புதியவை

கழுத்து வலியால் பெரும் அவதியா? அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்

பொதுவாக நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் கழுத்து வலியால் பெரும் அவதிப்படுவதுண்டு.

அவர்கள் வேலையில் நடுவில் சில உடற்பயிற்சிகளை செய்தால் கழுத்துவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் இதற்கு “வார்ம் அப்” பயிற்சி பெரிதும் உதவி புரிகின்றது. இது கழுத்துவலியில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது.

தற்போது அந்த பயிற்சியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

பயிற்சி

  • பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், நிமிர்ந்த நிலையில் கதிரையில் உட்கார்ந்து, புன்னகையுடன் ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும்.
  • பாதங்களைத் தரையில் பதித்து, உள்ளங்கைகளைத் தொடைகளில் வைத்து, கண்களை மூடி 10 முறை ஆழமாக மூச்சை இழுத்து, வெளியிட வேண்டும்.
  • வார்ம் அப் நிலையில், உட்கார்ந்தபடியே கண்களைத் திறந்து, ஆழமாக மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும்.
  • மெதுவாக மூச்சு விட்டபடியே இடதுபுறமாகக் கழுத்தைத் திருப்பி, மூச்சை உள் இழுத்தபடி பழைய நிலைக்கு வந்து, மூச்சை வெளியேவிட வேண்டும்.
  • கழுத்தைத் திருப்பும்போது, இரண்டு விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
  • இதேபோல், வலதுபுறம், மேல், கீழ் எனக் கழுத்தைத் திருப்பி பயிற்சி செய்ய வேண்டும். கழுத்தை மட்டும் திருப்ப வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்ய வேண்டும்.
பலன்கள்

மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராகச் செல்லும். மூளை செல்கள் புத்துயிர் பெறும். கழுத்து வலி குறைவதை உணர முடியும். இறுக்கங்கள் நீங்கும்.

குறிப்பு

நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது தசைகள் இறுக்கம் அடைந்திருக்கும். அந்தநேரத்தில் பயிற்சி செய்தால், தசைகள் பாதிக்கப்படும்.

Related Articles

Close