உறவுகள்புதியவை

கணவன்-மனைவி இந்த தப்பு மட்டும் திரும்ப திரும்ப செய்யாதீங்க…

நீங்கள் ஒரு உறவில் இருக்கும் போது சில தவறுகளை நாம் திருத்திக் கொள்வது நல்லது. அது உங்க உறவை சீர்படுத்துவதோடு சண்டை சச்சரவுகள் வராமல் செல்வதற்கு உதவி செய்யும். எனவே ஒரு உறவில் நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்வது மிகவும் அவசியம்.

கடந்த ஆண்டு உங்க வாழ்க்கையில் என்ன வேணும்னாலும் நடந்து இருக்கலாம். நீங்கள் உறவில் நிறைய பிரச்சினைகள் மற்றும் சோகங்களை சந்தித்து வந்து இருக்கலாம். கடந்த ஆண்டு தவறுகள், வலிகள் மற்றும் தவறான புரிதல்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு நேர்மறையான எண்ணத்துடன் உறவில் அடியெடுத்து வையுங்கள். உங்க உறவுகள் மிகவும் நுணுக்கமான அடிப்படையில் அமைந்தவை. எனவே அதைக் கையாள நீங்கள் ஏகப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

உங்களுடைய தவறுகள் சரி செய்யப்படாவிட்டால் அது இரு துணைகளுக்கும் இடையிலான உறவை மெதுவாக அழிக்கக் கூடும். உறவில் செய்யும் தவறுகளை மன்னிப்பதும், மறக்கவும் வேண்டும். இரண்டு பேருக்கு இடையே புரிதல் மற்றும் நேர்மறையான அணுகுமுறைகள் இருப்பது அவசியம். எனவே இந்த ஆண்டில் உறவில் திரும்பவும் நீங்கள் செய்யக் கூடாத தவறுகளை பற்றி நாம் பார்க்க போகிறோம்.

சரியான நேரத்தில் அன்பை ஒப்புக் கொள்ளாமல் இருத்தல்

சரியான நேரத்தில் வெளிப்படாத அன்பு கண்டிப்பாக நன்மை பயக்காது. உங்க துணையின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த நேரம் வரும் வரும் என்று காத்திருப்பது தவறு. உண்மையில் அவரிடம் உங்க காதலை சொல்வது கடினமாக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் வராத நேரத்திற்காக காத்திருப்பது தவறு. எனவே உங்க துணையிடம் அன்பை காதலை வெளிப்படுத்த தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அன்பை வெளிப்படுத்த நேரம் காலம் கிடையாது எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.

​எல்லைகளை அமைக்காமல் இருத்தல்

ஒரு உறவில் எல்லைகள் என்பது மிகவும் அவசியம். நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், உங்கள் இருவருக்கும் இடையிலான சமன்பாட்டை சமப்படுத்த எல்லைகள் மட்டுமே உங்களுக்கு உதவும். ஒரு உறவில் இறங்குவதற்கு முன்பு நீங்கள் வசதியாக இருப்பதை பகுப்பாய்வு செய்வது அவசியமில்லை. உங்க துணைக்கான எல்லைகளையும் உங்களுக்கான எல்லைகளையும் வகுத்துக் கொள்வது நல்லது.

நண்பர்கள்

நண்பர்களின் அழுத்தத்தால் உறவு முடிவுகள் பாதிக்கப்படக்கூடாது. நாம் அடிக்கடி சுற்றியிருப்பவர்கள் கொடுக்கும் அழுத்தத்தால் உறவில் நுழைகிறோம். நீங்கள் ஒரு முடிவை எடுக்கும் போது நண்பர்களின் அழுத்தத்தால் வேறொரு முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது. உங்க உறவை பற்றி ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் போது சகாக்களின் அழுத்தத்தால் முடிவை எடுக்காதீர்கள்.

​முன்னுரிமை அளிக்காமல் இருப்பது

இரண்டு நபர்களும் இணைந்தது தான் உறவு. எனவே உறவில் இருக்கும் போது ஒருவருக்கொருவர் முன்னுரிமையும் ஆற்றலையும் கொடுக்க வேண்டும். உங்க துணையின் விருப்பங்களை கவனிக்க வேண்டும். உங்கள் கருத்துக்கள், பார்வைகள் மற்றும் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது நீங்கள் மட்டும் சுயநலவாதி என்று அர்த்தமல்ல. உங்க சொந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறீர்கள் என்றே அர்த்தம். இருப்பினும் உங்க விருப்பங்களோடு உங்க துணையின் விருப்பங்களையும் கவனியுங்கள்.

​மன்னிப்பு குறித்து உணராமல் இருப்பது

உறவில் இருக்கும் போது உணர்திறன் கொண்டவராக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முயற்சியை உங்க பிணைப்பில் வைக்க வேண்டும். அதை நீங்கள் சமப்படுத்த வேண்டும்.எனவே விவாதங்கள் வரும் போது மன்னிப்பு கேட்கவும், இறங்கவும் தயங்காதீர்கள். இது உங்க நிலைப்பாட்டை ஒரு போதும் பாதிக்காது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker