ஆரோக்கியம்புதியவை

தினமும் ஒரு துண்டு தேங்காயை ஏன் பச்சையாக சாப்பிட வேண்டும்?

தேங்காயில் நம்முடைய உடலுக்கு நன்மை செய்யும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நாம் ஆரோக்கியம் என்று நினைக்கிற பழச்சாறுகளில் கூட கலப்படம் செய்ய முடியும். ஆனால் இளநீரில் கலப்படமே செய்ய முடியாது என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அத்தகைய தேங்காயை தினசரி உணவிலும் அல்லது பச்சையாகவும் எடுத்துக் கொள்வதால் என்னென்ன மாதிரியான மருத்துவப் பயன்களைப் பெறலாம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
​கொழுப்பு நிறைந்தது

தேங்காயில் நிறைய கொழுப்பு இருக்கிறது என்று சொல்வது உண்மை தான். ஆனால் கொழுப்பில் எல்.டி.எல்., மற்றும் எச்.டி.எல் என்னும் இரண்டு வகை உண்டு. அதில் தேங்காயைப் பொருத்தவரையில் உடலுக்கு நன்மை செய்கின்ற சீரான கொழுப்புச் சத்தே நிறைந்திருக்கிறது. குறிப்பாக பச்சையாக சாப்பிடும் போது உடலில் அது நல்ல கொழுப்பாகவே சேர்கிறது. ஆனால் தேங்காயை சமைக்கிறோம் என்று சூடு செய்கின்ற பொழுது, தேங்காயில் கொழுப்புச் சத்து அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

அதனால் தான் தேங்காயை உடைத்து அரை மணிக்குள் அப்படியே பச்சையாக சாப்பிட்ால் அது உடலுக்கு அமிர்தத்தைப் போன்றது என்று பெரியோர்கள் சொல்வதுண்டு.

​ரத்தத்தை சுத்தப்படுத்தும்

தேங்காயில் உள்ள கொழுப்பைத் தாண்டி, நம்முடைய உடலில் தேங்கியிருக்கின்ற கெட்ட கொழுப்புகள் மற்றும் உடலில் தேங்கியிருக்கும் அழுக்குகள், நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் தேங்காய்க்கு உண்டு. அதோடு நம்முடைய ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும் ஆற்றலும் தேங்காயில் இருக்கிறது.

​செல்கள் தோற்றம்

தலை முதல் கால் வரை உள்ள பகுதிகள் மற்றும் உடலின் உள்ளுறுப்புகளையும் புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளும். உடலை வலுப்படுத்தும். செல் வளர்ச்சிக்கு உதவும். உடலில் புதிய செல்களைத் தோற்றுவிக்கும்.

​கொதிக்க வைப்பது

தேங்காயை சமையலில் சேர்க்கும் போது, குறிப்பாக குழம்பு வகைகளில் தேங்காயை அரைத்து கொதிக்க வைக்கிற பொழுது, அது சூடாகி உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்பாக மாறிவிடுகிறது. இதுவே பச்சையாக சாப்பிடும்பொழுது அதிலுள்ள முழு சத்தும் நமக்குக் கிடைக்கும். அதோடு உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பையும் எளிதாகப் பெற முடியும்.

​குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்ற பெயரில் கண்ட கண்ட பாக்கெட் உணவுகளையும் ஜங்க் ஃபுட்களையும் கொடுக்கிறோம். அதற்கு பதிலாக தேங்காயைப் பூப்போல துருவி அதில் சிறிது நாட்டுச் சர்க்கரை கலந்து மாலை வேளைகளில் ஸ்நாக்ஸாகக் கொடுக்கலாம். அது உடலுக்கும் எந்த தீங்கும் செய்யாது. எலும்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.

​இறப்பை மீட்டெடுக்கும்

யாரேனும் இறக்கும் தருவாயில் இருந்தால் அவர்களுடைய வாயில் பசும்பால் ஊற்றுவார்கள். அவர்கள் அதை குடித்துக் கொண்டே இறக்கும் வழக்கமும் சடங்குபோலவே இருக்கிறது. ஆனால் பழங்காலத்தில் இந்த பால் ஊற்றும் வழக்கம் எப்படி வந்தது தெரியுமா? பழங்காலத்தில் பசும்பாலுக்கு பதிலாக தேங்காய்ப் பால் தான் ஊற்றுவார்கள். இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் வாயில் தேங்காய் ஊற்றி குடிக்கச் செய்தால் ஆயுள் நீட்டிக்குமாம். இறப்பையும் தடுக்கும் சக்தி தேங்காய்ப் பாலுக்கு உண்டு. அந்த வழக்கத்தையே நாம் முற்றிலும் மாற்றிவிட்டோம்.

​தாய்ப்பாலுக்கு நிகர்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக தேங்காயை பச்சையாக உணவில் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, காலையில் பால், டீ, காபிக்கு பதிலாக தேங்காய் பாலெடுத்து அதில் நாட்டுச் சர்க்கரை, தேன், கருப்பட்டி என ஏதாவது ஒன்றைக் கலந்து குடிக்கலாம். நாள் முழுவதுக்குமான ஆற்றலை நீங்கள் அதிலிருந்து பெற முடியும். தேங்காய்ப் பால் தாய்ப்பாலுக்கு நிகரான சக்தி கொண்டது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது மருத்துவ ரீதியாகவும் உண்மையான விஷயம் தான். ஏனெனில் தாய்ப்பாலில் இருக்கின்ற மோனோலாரின் என்னும் சக்தி தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக தேங்காய்ப்பாலில் தான் இருக்கிறதாம்.

​தலைமுடிக்கும் சருமத்துக்கும்

சருமத்துக்கு பளபளப்பைத் தரும். சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி மென்மையாக வைத்திருக்க தேங்காய் எண்ணெயும் தேங்காய்ப்பாலும் பயன்படுத்தலாம். அதேபோல கூந்தல் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு தேங்காய்க்கு உண்டு. தேங்காய் எண்ணெயை தலைமுடிக்குத் தடவுவதோடு குறைந்தது வாரத்துக்கு ஒரு நாள் தேங்காய்ப்பாலை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Related Articles

Close